பக்கம்:பிறந்த மண்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பிறந்த மண்

கொண்டு. அவளிடம் மிகவும் ஜாக்கிரதையாகப் ւմէթն வேண்டும் நீ" என்று இரகசியமாக எச்சரித்தார்.

முதல்நாள் மாலை தான் வெளியே போய்ச்சுற்றிவிட்டு வந்ததைப் பற்றி அவர் மனத்தில் ரதோ சந்தேகம்: ஏற்பட் டிருக்கிறது. ஒருவேளை தான் பூர்ணாவின் வீட்டிற்கே போயிருந்தாலும்.போயிருக்கலாம் என்று அவிச் சந்தேகப் பட்டிருக்கிறார். அதனால்தான் தன்னை இரகசியமாகக் கூப்பிட்டு எச்சரித்திருக்கிறார் என்று அவனுக்குத் தோள் றியது. சபாரத்தினத்தின் எச்சரிக்கைக்கும், அவருடைய எச்சரிக்கைக்கும் ஒருவிதத்தில் ஒற்றுமை இருப்பதைக்கூட அவன் சிந்தித்தான். பூர்ணாவின் பிடியில் அயர்ந்து மறந்து அவன் சிக்கிவிடலாகாது என்பதை இருவருடைய எச்சரிக் கையும் வற்புறுத்தின. மற்றவர்கள் பயப்பட்டே ரே வேண்டிய ஏதோ சில அம்சங்கள் அந்தப் பெண் பூர்ணா விட்ம் இருக்க் வேண்டுமென்ற பயம் அழகியநம்பியின் மனத்தில் உறுதிப்பட்டது.

ஒன்பது அடித்து முப்பத்தைந்து நிமிடங்களுக்கெல்லாம் அலுவலக அறைக்குள் தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டு விட்டான் அழகிய நம்பி. முதல்நாள் அந்த இடத் 'தில் உட்கார்ந்தபோது இருந்த தெம்பும், நம்பிக்கையும் அப்போது அவன் மனத்தில் இல்லை. மாறாக குழப்பமும், அச்சமுமே வளர்ந்திருந்தன

பத்தேகால் மணிக்குப்பூர்ணா வந்தாள். அவன் எழுந்) திருந்து வணங்கினான்; அவள் அதைக் கவனிக்காதது போல் தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவள் விட்டுக்கு வராமல் ஏமாற்றிவிட்டு, சபாரத்தினத்தோடு கழனியாவுக்குப் போனது பற்றித் தன்னைத் திட்டுவாள், அதட்டுவாள் என்று.அழகியநம்பி எதிர்பார்த்தான்.

ஆனால், அவள் அவனோடு கலகலப்பாகவோ, சாதாரணமாகவோ ப்ேசவே இல்லை. அதிகாரம் செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/166&oldid=597568" இலிருந்து மீள்விக்கப்பட்டது