பக்கம்:பிறந்த மண்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 - பிறந்த மண்,

பைல்களையும், கடிதங்களையும் முன்பு எப்படி அடுக்கி அவள் வைத்திருந்தாளோ, அப்படியே வைத்தான். கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு பின் கட்டுக்குச் சென்றான். சமையற்காரச் சோமுளைக் கூப்பிட்டுச் சபாரத்தினத்தை அழைத்துவரச் சொல்லி அனுப்பினான். சோமு சென்றதும் தன்.அறைக் கதவைத் திறந்து குறுக்கும் நெடுக்குமாக உலவிக் கொண்டிருந்தான் அழகிய நம்பி.

கவலைகளாலும், குழப்பங்களாலும் பயம் நிறைந்த எண்ணங்களாலும் தலையே வெடித்துச் சிதறிவிடும் போல இருந்தது அவனுக்கு. காலையில் பிரமநாயகம் தன்ன்ைத் தனியே கூப்பிட்டு எச்சரித்தது, அதன்பின் தபாலில் வந்த பயமுறுத்தல் கடிதம், பூர்ணா அறைக்குள் வந்து பார்த்து விட்டுப் பேசாமல் வேகமாக வெளியேறிச் சென்றது,எல்லா வற்றையும் சேர்த்து நினைத்தபோது பிழைப்பும் வேண் டாம். காசு சேர்க்கவும் வேண்டாம். ஊரில் போய்த் தெருப் பெருக்கியாவது பிழைக்கலாம். யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் இப்படியே அடுத்த கப்பலில் ஏறி ஊர். திரும்பிவிட்டால் என்ன என்று ஒருவகை வெறுப்பும் விரக்தியும் அவனுக்கு உண்ட்ாயின " -

வேல்ை வெட்டி ஒன்றும் இல்லாமல் குறிஞ்சியூரில் ஆப்பனார் காலமான பின் சில காலம். சும்மர் இருந்து இந்திச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதுகூட அவன் மனத் தில் இவ்வளவு கவலைகளோ, வேதனைகளோ, பயன்ே இருந்ததில்ல்ை. வேலை கிடைத்தபிறகு, புதிய இடத்துக்குப் ஆதிது நம்பிக்கைகளோடு வந்த பிறகு கவலைகள் குறையும் என்பார்கள். ஆனால், அவனுக்குக் கவலைகள் பெருகி யிருந்தன-- * . . . . . ... " ..

செய்தி!-என் து. சிரித்துக்கொண்டே அறைக்குள் வந்த்ார் சபாரத்தினம், - + >.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/176&oldid=597592" இலிருந்து மீள்விக்கப்பட்டது