பக்கம்:பிறந்த மண்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 - பிறந்த மண்

கெடுதல் செய்துவிட்டேன்? உன்னைப்போல ஒரு நல்ல பிள்ளை வேண்டுமென்பதற்காகத்தானே பிரியப்பட்டுக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்? இன்றைக்கு என்னிடம் நீ இப்படிப் பேசுவதைக் கேட்டால் யாரோ உன்னிடம் என்னைப்பற்றி தவறாக ஏதோ சொல்லி உன் மனத்தைக் கலைத்திருக்கிறார்களோ என்று சந்தேகப்படுகிறேன்.'பிரம நாயகம் ஒவ்வொரு வார்த்தையாக இழுத்து நிறுத்திப் பேசினார். х

'நான் பச்சைக்குழந்தை இல்லை, இன்னொருவர் சொல்லிக் கலைப்பதற்கு. நான் என்ன கெடுதல் செய் தேன்?...என்று என்னைப் பார்த்துக் கேட்கிறீர்களே! இன்றைக்கு நடந்த நிகழ்ச்சி போதாதா? இன்னும் வேறென்ன வேண்டும்? இதைவிடப் பெரிதாக நடந்தாலும் நான் பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டுமென்பது உங்கள் எண்ணம் போலிருக்கிறது.” •.

அழகியநம்பியின் ஒவ்வொரு கேள்வியும், ஒவ்வொரு சொல்லும்- பிரமநாயகத்தின் மனத்தில் கூர்மையாகப் பாய்ந்தன. ஊரில் புறப்பட்ட நேரத்திலிருந்து வாயில்லாப் பூச்சிபோல் தன்னிடம் அதிகம் பேசாமல் உம்மணா மூஞ்சி யாக இருந்த பையன இப்படி நிறுத்து அளந்து, பாயிண்ட், பாயிண்ட்டாகப பேசுகிறானே என்று திகைத்தார் அவர்.

"பொறுத்துக்கொள் தம்பி! அவள் இப்படி செய்வது இது முதல் தரமில்லை. கூடியவிரைவில் அவளுடைய கொட் டத்தை அடக்கிவிடுகிறேன்! நீ புத்திசாவித்தனமாக நடந்து கொண்டு அதற்கு உதவிசெய்வாய் என்று எதிர்பார்த்தேன். நேற்றுக் காலையில் உன்னைத் தனியே கூப்பிட்டு எச்சரித்தது கூட உன் நன்மைக்குத்தான்.' -

“என் நன்மையைக் கருதுகிறவராக இருந்தால் நீங்கள் அவளுக்கு முன்னால் அந்தப் பியூனையும் வைத்துக்கொண்டு என்மீது திருட்டுப் பட்டம் கட்டியிருக்க மாட்டீர்களே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/202&oldid=597656" இலிருந்து மீள்விக்கப்பட்டது