பக்கம்:பிறந்த மண்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 209

“என்ன? மிஸ்டர் அழகிய நம்பி! பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களே! எனக்கு இது சுத்தமாகப் பிடிக்காது. மனிதன் என்றிருந்தால் நன்றாகச் சிரித்துப் பேசி எல்லா ரோடும் கலகலப்பாகப் பழகவேண்டும். இதோ என்னைப் பாருங்கள். என்னுடைய பெண்களைப் பாருங்கள். நாங்கள் இப்படிப் பழகுவதையே ஒரு நல்ல குணமாக வழக்கத்தில் கொண்டு வந்துவிட்டோம்.’’- -

அழகியநம்பி அவர் கூறியதைக் கேட்டுச் சிறிது நான மடைந்தான்.

அதில்லையப்பா காரணம்! இவர் அதிகம் பேசாதவ ரென்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் அது தவறு. எங்களோடெல்லாம் தனிமையில் எவ்வளவு பேசுகிறார் தெரியுமா? நீங்கள் இராணுவத் துறையைச் சேர்ந்தவரில் லையா? அதனால்தான் உங்களிடம் பேசுவதற்குப் பயப்படு கிறார் போலும்.” -

மேரி தன் குறும்புப் பேச்சால் அவன் வாயைக் கிளறி னாள். அழகிய நம்பி வாயைத் திறந்தான்.

- ‘மேரி தப்புக் கணக்குப் போடுகிறாள். உங்களை ஒர் இராணுவ அதிகாரியென்றே என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் மலர்ந்த முகமும், சிரிப்பும், பேச்சும் --இராணுவத் துக்கே பொருத்தமற்றவை சிரித்தவாறே அவரிடம் கூறி

>

দুষ্ঠrtT6ঠাr.

'நீங்கள் அந்த மாதிரி எண்ணுவது தவறு. உத்தி யோகம் பார்க்கிற இடத்தில் உத்தியோக நேரத்தில்தான் அந்தப் பொறுப்புகள், கடமைகள் எல்லாவற்றிற்கும் நான் அதிகாரி. வீட்டுக்கு வந்துவிட்டால் எல்லாரையும் போல் நான் சாதாரண மனிதன். மனிதனுக்குரிய எல்லா உணர்ச்சி களையும் அனுபவிக்கத் துடிப்பவன்.”

“உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடிக்கிறது.’பி-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/211&oldid=597677" இலிருந்து மீள்விக்கப்பட்டது