பக்கம்:பிறந்த மண்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224. பிறந்த ußság

என்ன ஆகும்! இப்படி -என்னென்னவோ புரட்சிகரமான சிந்தனைகள் அழகிய நம்பியின் மனத்தில் உண்டாயின.

பிரயாணத்தின் கடைசி நாள் அது. அவர்கள் அனுராத புரத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பழம் பெருமை வாய்ந்த அந்தச் சரித் திர நகரத்தைப் பார்த்த போது தஞ்சாவூர்,மதுரை போன்ற தமிழ்நாட்டின் தெய்வீக நகரங்கள் அவன் நினைவிற்கு வந்தன் இசுரமுனியாவின் கோயில்,அபயகிரியி:; சிதைந்த சரித் திரச் சின்னங்கள் இவற். றையெல்லாம் பார்: ஐ விட்டுப் பொதுவாக நகரைச் சுற்றிப் பார்த்தார்கள் அது தபுரத்தில் தமிழர்களும் நிறைய வசிக்கிறார்கள் என்ற சேய்தியை டிரைவர் அவனுக்குக் கூறினார் -

நகரின் கடைத் தெருவில் கார் சென்று கொண்டிருந்த போது தமிழ்ப் பத்திரிகைகள் விற்கும் கடை ஒன்றைப் பார்த்தான் - - -

காரை நிறுத்தச் சொல்லிப் பத்திரிகைகள் வாங்கிக் கொண்டு வருமாறு டிரைவரை அனுப்பினான் அழகிய நம்ழி, டிரைவர் இறங்கிப்போய்க்கொழும்பியிலிருந்து பிரசுரமாகும் இரண்டு தமிழ்த் தினசரிகளை வாங்கிக்கொண்டு. வந்து கொடுத்தான். கார் புறப்பட்டது o

ஒரு பத்திரிகையை எடுத்துப் பிரித் தான் முதல் பக்கத்தில் பிரசுரமாயிருந்த செய்தியைப் படித்தவுடன் அவ னுக்குத் தூக்கிவாரிப் போட்டது. காருக்குள் எல்லாருக்கும் கேட்கும் குரலில் "ஐயோ என்று அலறிவிட்டான் அவன். “என்ன? என்ன?’ என்று மேரி, லில்லி, டிரைவர் எல்லாரும் கலவரமடைந்து அவனையும் அவன் கையிலிருந்த பத்திரிகை யையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அவன், அவர்களுக்குப் பதில் ஒன்றும் ச்ொல்லத் தோன்றாம்ல் பத்திரிகையின் முதல் பக்கத்தில் பிரசுரமாயிருந்த செய்தியைப் ப்டிக்கத் தொடங்கினான். நிலைகுத்தி அகன்று மிரண்ட அழகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/226&oldid=597713" இலிருந்து மீள்விக்கப்பட்டது