பக்கம்:பிறந்த மண்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 ' பிறந்த மண்

யாவது செய்து எதிலாவது அகப்பட்டுக்கொண்டு திடீர் என்று கவிழ்ந்து போகிறார்கள்...' என்றாள் மேரி.

"அந்தத் தத்துவமெல்லாம் இருக்கட்டும். இப்போது இவர் என்ன செய்வார்? அந்த மோசக்கார வியாபாரியை நம்பிக் கடல் கடந்து வந்து இவரல்லவா மோசம் போய் விட்டார்? இவருக்கு இங்கே வேறு ஏதாவது நல்ல வேலை யாகப் பார்க்க வேண்டுமே?....” என்று லில்லி , அனுதாபத் தோடு கூறினாள். அழகிய நம்பி ஒன்றும் பேசத் தோன் றாமல் சிலையாக சமைந்துபோய் உட்கார்ந்திருந்தான். அவனுடைய மனம் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தது.

இந்த முடிவு அவன் எதிர்பார்த்ததுதான். சபாரத்தினம் அன்று குறிப்பாக அவனிடம் சொல்லியிருந்த உண்மையிலி ருந்து என்றாவது ஒருநாள் பிரமநாயகத்துக்கும் அவருடைய வியாபாரத்துக்கும் இந்த கதி ஏற்படுமென்று அவன் எண்ணியதுண்டு. ஆனால், இவ்வளவு விரைவில் அது ஏற்படு மென்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை.

மறுபடியும் சந்தேகத்தோடு பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தான். கொலை, கடைக்குள்ளேயே நடந்திருப்பத னால் கடை எல்லைக்குட்பட்ட எல்லா இடங்களும் பூட்டிச் சீல் வைக்கப்பட்டுப் போலீசார் வசம் இருப்பதாகப் போட்டி ருந்தது.

சிறைக்கதவுகளுக்கு உள்ளே விலங்குபூட்டிய கைகளோடு நிற்கும் பிரமநாயகத்தை மானசீகமாகக் கற்பனை செய்து நினைத்துப் பார்த்துக் கொண்டான் அவன்.

"மிஸ்டர் அழகியநம்பி! நீங்கள் எதை நினைத்தும் வருத்தப்படவேண்டாம். அந்தக் கடையோடு உங்களுக் இருந்த தொடர்பு இந்த விநாடியோடு விட்டுப் போய்விட்ட தென்று நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். அப்பாவுக்கு எத்தனையோ பெரிய கம்பெனிகளில் செல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/228&oldid=597718" இலிருந்து மீள்விக்கப்பட்டது