பக்கம்:பிறந்த மண்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 255.

வர்களோடும் ஊர் சுற்ற வேண்டுமென்று நினைக்கலாமா?அவனுடைய சிந்தனைக்கு ஒரு முடிவே இல்லை.

கப்பல் கிராதியருகே வெயில் கடுமையாக உறைத் தது. சபாரத்தினத்தின் அன்பளிப்பான கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். மணி பதினொன்று ஆவதற்கு இருந்தது. வெயி வின் சூடு பொறுக்காமல் இடத்தில் வந்து உட்கார்ந்தான். கப்பலின் ஆட்டத்தில் சோர்வடைந்து சுருண்டுபோய்ப்படுத் திருந்தார் கிழவர். அநேகமாக எல்லாரும் அதே நிலையில் தான் இருந்தனர். கப்பல் செல்லுகிற ஒலியைத் தவிர அதில் பிரயாணிகள் இருக்கிறார்கள் என்பதற்குரிய எந்த அடை யாளமும் தெரியாததுபோல் சந்தடியற்றிருந்தது.

அழகிய நம்பிக்குப் பசியாக இருந்தது. கப்பலில் குழாய் இருந்த அறைக்குப் போய் முகம், கைகால் கழுவிக்கொண்டு கீழ்த்தட்டிலிருந்த உணவு விடுதிக்கு இறங்கிச் சென்றான் அவன். சாப்பாட்டை முடித்துக்கொண்டு வந்ததும் அவ னுக்கு அசதியாக இருந்தது. முதல் நாள் இரவும் அவனுக்கு நல்ல தூக்கமில்லை. கப்பலில் தான் உட்கார்ந்து கொண் டிருந்த இடத்திலேயே நீட்டி முடக்கிக்கொண்டு சாய்ந் தான். அந்த வசதிக் குறைவான சூழ்நிலையிலும் நன்றாக அயர்ந்து துரங்கிவிட்டான்

மாலை ஐந்தேகால் மணி சுமாருக்குக் கப்பலின் சங்கொலி அவனை எழுப்பியது. எழுந்திருந்து கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு பார்த்தான். கப்பலைத் தூத்துக் குடித் துறைமுகத்தில் இழுத்து நங்கூரம் பாய்ச்சிக் கொண் டிருந்தார்கள். தூங்கியெழுந்திருந்த அசதி உடல் முழுதும் பூட்டுப்பூட்டாக வலித்தது. கைகளை உதறிச் சோம்பல் முறித்துக்கொண்டு இறங்குவதற்குத் தயாராகச் சர்மான் களை வரிசையில் எடுத்து வைத்தான். அன்றொரு நாள் இதே மாதிக் கலகலப்பான மாலைநேரம் ஒன்றில் இதே துறைமுகத்திலிருந்து பிர்மந்ாயகத்தோடு கொழும்புக்குக் கப்டிலேறிய நினைவு வந்தது அவனுக்கு. தான் அன்று புறப் பட்டது, இன்று திரும்பி வந்தது, அன்றிருந்த ஆர்வமும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/257&oldid=597788" இலிருந்து மீள்விக்கப்பட்டது