பக்கம்:பிறந்த மண்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பிறந்த மண்

இரண்டொரு நல்ல வாயில் சிற்றாடைகளையும், பட்டு இரவிக்கைத் துணிகளையும் கோமுவுக்கும் பகவதிக்கும் கொடுக.கவேண்டும் என்று அழகியநம்பி தனக்குள் தீர்மர்ம்ை செய்து கொண்டான். பழக்கூடைகளைத்தெரிந் தவர்கள் எல்லாருக்கும் கொஞ்சம், கொஞ்சமாகப் பங்கு வைத்துக் கொடுத்துவிட வேண்டியதுதான். பெருமாள் கோயில் மணியம் நாராயணப்பிள்ளை, முன் சீப், புன்னை வனப்புலவர் ஆறுமுகம், வாசகசாலைக் கந்தப்பன், காந்திமதி ஆச்சி-எல்லாருக்கும் பிரித்துக் கொடுத்தால் சரியாக இருக்கும். பன்னிர்ச்செல்வம், கரிவேட்டை, விறகு வேட்டைக்காக மலைப்பக்கம் போகாமல் ஊரில் இருந்தா ரானால் அவரைக் கூடப் போய்ப் பார்த்துக் கொஞ்சம் பழங்களைக் கொடுத்து கடனுக்கு அவசரப்படுத்தி

விரட்டாமல் சமாதானப்புடுத்தி விட்டு வரலாம்

முருகேசனும், மற்ற நண்பர்களும் கோடை விடுமுறை யின்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுற்றிப் பார்க்கப் போவதாக அவன் எழுதியிருந்தானே? முடிந்தால் நாமும் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாமே!

அடாடா! நான் என்ன முட்டாள்தனமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் குடும்ப நிலையென்ன? என்தலை யில் சுமந்திருக்கும் கடன் சுமை எவ்வளவு? வேடிக்கையாக ஊர் சுற்றலாமா? உல்லாசப் பிரயாணம் போகலாமா? ஆஎன்று விளையாட்டுப் புத்தியில் நினைத்துக் கொண்டிருக் கிறேனே! என் திட்ட்ங்கள் நிறைவேறி, நான் உருப்படியாக வாழ்ந்த குடும்பத்தைக் கடன் தொல்லைகளிலிருந்து மீட்க வேண்டுமே! தங்கை வள்ளியம்மைக்கு நல்ல இடத்தில் நல்ல :படியாகத் திருமணம் செய்து அனுப்பி வைக்கவேண்டுமே; நான் நாலைந்து வருஷங்கள் கொழும்பில் பிரமநாயகத்தின் க்டையில் வேலைபார்த்து மிச்சம் பிடித்து ஆயிரக்கணக்கிலே சேர்த்துக் கொண்டுவந்து இதையெல்லாம் குறைவின்றிச் செய்து முடிக்கப் போகிறேன் என்று என் தாய் சொப்பனம்' கண்டு கொண்டிருப்பாளே! நான், முருகேசனோடும் மற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/256&oldid=597786" இலிருந்து மீள்விக்கப்பட்டது