பக்கம்:பிறந்த மண்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - பிறந்த டின்

ஆனால், சொல்லவில்லை. அவனுடைய தலை அவஐ. அறியாமலேயே அவருக்குச் சாதகமாகச் சம்மதமெஷ் கூறுவதுபோல அசைந்தது. - 4.

பீப்பாய் உருளுவதுபோல் விசுக்கு விசுக்கென்று நடந்து சென்ற பிரமந்ாயகத்தில் குறுகிய உருவத்தை ஏமாற்றத் தோடு பார்த்துக்கொண்டு நின்றான் அழகியநம்பி. அவர் யார்? அவரிடம் அவன் எதற்காகப் பயப்படவேண்டும்?அவனுக்கே புரியவில்லை. 'சொல்லிவிட வேண்டும் துண் வோடு சொல்லியே ஆகவேண்டும்’-என்று நினைக்கிறான் அவர் முகத்தைப் பார்த்ததும் மறந்து விடுகிறான். எங்கும், எப்போதும், உலகம் முழுவதும் அடிமைத்தாம் என்ற ஒர் இழிந்த பண்பே இப்படிக் காரண காரியமற்ற ஒருவகைப் பயத்தினால்தான் உண்டாகிறதோ, என்று சிந்தித்தான் அவன். - *

ஆனால், அவரிடம் அவனுக்கு ஏற்பட்ட பயத்துக்குக் காரணம் இல்லையென்று எப்படிச் சொல்லிவிட முடியும்? அவருக்குக் கீழே வேலைபார்த்து ஆளாவதற்குத் தானே அவன் போய்க் கொண்டிருக்கிறான்? அவருடைய தயவு அவனுக்கு வேண்டாமென்று சொல்லிவிட முடியுமா? அவர் போவதைய்ே பார்த்துக் கொண்டிருந்த அவன் அவர் நுழைந்த இடத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டான். துறை முகத்து வாசலில் வலப் பக்கம் திரும்பி, ஒட்டலுள் நுழைந் தார் பிரமநாயகம்! - " . . f

பார்த்துக் கொண்டே நின்ற அழகியநம்பிக்கு யாரோ உச்சந்தலையில் ஒங்சி அடித்தாற்போல இருந்தது. பக்கத் தில் யாரோ ஒருவரைப் பார்த்துவிட்டு வருகிறேன்" ೯Trg தன்னிட்த்தில் பிரமநாயகம் ஏன் பொய் சொல்லிவிட்டுப் போகவேண்டுமென்று திகைத்தான்! ஒரு விநாடி பிரம நாயகம் என்ற அந்தப் பெரிய பணக்கார மனிதர் மிகக் கேவலமானவராக-மிக இழிந்தவராகத் தோன்றினார். அவனுடைய இளம் மனம் கொதித்தது. சே சே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/36&oldid=596676" இலிருந்து மீள்விக்கப்பட்டது