பக்கம்:பிறந்த மண்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - பிறந்தமண்

கொள்ளமுடியாமல் சேர்ந்து போய்ப்படுத்திருந்தார்.அவர், மேல் தளத்திலிருந்த பிரயாணிகளில் பெரும்பான்மையான வர்கள் அதே நிலையில்தான் இருந்தனர். அதே கப்பலில் அவனோடு பிரயாணம் செய்த இரு ஆங்கிலோ இந்திய யுவதிகள் மட்டும் அவனைப்போலவே மேல் தளத்தில்கிராதி அருகே நின்று கடற்காட்சிகளை இரசித்துக்கொண்டிருந் தனர். மேல்தளத்தில் மின்சார விளக்கொளியில் கீச்சுக் குரலில் ஆங்கிலப் பேச்சும், கிண்கிணிச் சிரிப்புமாக அவர்கள் நின்று கொண்டிருந்த நிலை ஏதோ ஒரு நல்ல ஒவியம் போல் காட்சியளித்தது.

அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கும், அவன் நின்று கொண்டிருந்த இடத்திற்கும் நடுவே பத்துப் பன்னி ரண்டு அடி இடைவெளி இருக்கலாம் பரங்கிப்பூ நிறம், சுருள் சுருளாக பாப்' செய்த கூந்தல், கையில் அலங்காரப் பை, முல்லை அரும்புகள் உதிர்வதுபோலச் சிரிப்பு. அழகிய நம்பியின் பார்வை இரண்டொரு விநாடிகள் அந்தப் பெண் களின் மேல் நிலைத்தது. அவர்களும் அவனைப் பார்த்தனர்.

கூச்சம், வேறு பாடறியாத அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே நடந்து அவனருகே வந்துவிட்டனர். கப்பல் செல்லும் போது நடந்தால் தள்ளாடுமே; அந்தப் பெண்கள் குதிகால் உயர்ந்த பாதரட்சையைத் தளத்தில் ஊன்றித் தடுமாறித் தடுமாறி நடந்தது வேடிக்கையாக இருந்தது. அழகியநம்பி அவர்களுடைய புன்னகைய்ை ஏற்றுக் கொள்வதுபோல் பதிலுக்குப் புன்னகைத்தான். இடுப்புப் பட்டைகள் இறுக்கித் தைக்கப்பட்டிருந்த அந்த கவுன் களோடு அவர்களைப் பார்க்கும்போது, இல்லையோ உண்டோவெனச் சொல்லிய இடை' என்று எப்போதோ கேள்விப்பட்டிருந்த இலக்கிய வரிகள் அவன் நினைவில் எழுந்தன. - - ... '

அந்த யுவதிகள் அவனருகே வந்து நின்றுகொண்டு சரமாரியாக ஆங்கிலத்தில் கேள்விகளைத் தொடுத்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/50&oldid=596704" இலிருந்து மீள்விக்கப்பட்டது