பக்கம்:பிறந்த மண்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - - பிறந்த மண்

கூறப்போகும் பதிலையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. இளமையும், எழிலும் ஒன்றோடொன்று போட்டியிடும் அந்தச் சுந்தர முகங்கள் வாடும்படியான பதிலைச் சொல்ல அவன் விரும்பவில்லை. அதே சமயத்தில் தன்னை ஊர் தேடி வந்து அழைத்துச் செல்லும் பிரமநாயகம் வித்தியாச மாக நினைத்துக் கொள்ள இடங் கொடுக்கவும் அவன் தயாராக இல்லை. -

"நீங்கள் இருவரும் தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும். நான் அந்த மனிதரோடு புறப்பட்டு வந்திருக் கிறேன். அவரைத் தனியே விட்டுவிட்டு உங்களோடு சேர்ந்து சாப்பிட்டால் வித்தியாசமாக நினைத்துக்கொள் ளுவார்"- என்று ஆங்கிலத்தில் கூறினான் அழகியநம்பி,

அதைக் கேட்டு அவர்கள் இருவரும் வெண் பல்வரிசை செவ்விதழ்களுக்கிடையே தெரிய கலகலவென்று சிரித் தனர். பிரமநாயகத்தைச் சுட்டிக் காட்டி நான் பேசிய வுடன் இவர்கள் இப்படிச் சிரிக்கிறார்களே, அந்த மனிதர் நாங்கள் மூவருமாகச் சேர்ந்து அவரைக் கேலி செய்வதாக நினைத்துக் கொள்ளப் போகிறார்!- என்று உள்ளூர வருந்தி அஞ்சினான் அழகிய நம்பி.

"ஓ! இதற்குத்தானா இவ்வளவு நடுங்குகிறீர்கள்? அவரையும் நம்மோடு சாப்பிடுவதற்கு அழைத்துக்கொண்டு விட்டால் போகிறது” என்று சொல்லிக் கொண்டே மேரி பிரமநாயகத்தை அழைப்பதற்காக அவர் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி ஓடினாள். ஆடுகிற கப்பலில் சிவப்பு கவுன் அணிந்த அவள் தாவி ஓடும் காட்சி உள்ளத்தை அள்ளியது. பட்டுப்பூச்சி பறப்பதுபோல் என்பதா, அல்லது மான்குட்டி துள்ளுவதுபோல் என்பதா-அதை எப்படிச் சொல்வதென்று அழகிய நம்பியின் க்ற்பனைக்கு எட்ட வில்லை. . . . . . . - - * :

"உங்கள் தங்கை மான்குட்டியாகப் பிறந்திருக்க வேண்டியவள்"- என்று புன்ன்கையோடு வில்லியைப் பார்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/54&oldid=596712" இலிருந்து மீள்விக்கப்பட்டது