பக்கம்:பிறந்த மண்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி šį

சிரிப்பும், சரளமான பேச்சும் அந்தப் பெண்களுக்கு மிகவும் பிடித்திருந்தனர். எவற்றைப் பற்றிப் பேசுவது? எவ்வளவு நேரம்தான் பேசுவது- என்று தோன்றலாம்! பேசவேண்டு. மென்ற ஆசையும் பேசுவதற்குப் பிடித்தமான ஆளும் கிடைத்துவிட்டால் விஷயமா இல்லாமற் போய்விட்ப் பேர்கிறது? - - - - கப்பலின் ஆட்டம், நட்சத்திரங்களின் அழகு, கடலும் வானமும் எதைஎதையெல்லாம்ோ பேசிச்சிரித்துக் கொண்டு நின்றார்கள் அந்த மூவரும். - - -

பிரமநாயகம் பிரமித்தார். ஏதேது பையன் பெரிய - ஆளாக இருப்பான் போலிருக்கிறதே? இங்கிலீஷில் சரமாரி யாகப் பொழிகிறானே? பலசரக்குக் கடையில் கணக்குப் பிள்ளையாக உட்கார்ந்து அடங்கி ஒடுங்கிக் காலம் தள்ளு வானா அல்லது நம்மை மீறிப்போய்விடுவானா?-தமிழில் சரியாகக் கையெழுத்துப்போடும். அளவிற்குக்கூட. அறிவில் லாத ஒரு பணக்காரர் தம்மிடம் வேலைக்கு வரும் பையனின் அறிவை எண்ணி வியந்ததில் ஆச்சரியமில்லை. -

உணவு நேரம் வந்தது. இன்றைக்கு இந்தக் கப்பலில் உங்களைச் சந்தித்நதை எங்கள் பாக்கியமாகக் கருது கிறேன். நீங்கள் இப்போது எங்களுடன் சாப்பிடுவதற்கு வரவேண்டும்” என்று லில்லியும் மேரியும் அவனிடம் மன்றாடினார்கள். திடிரென்று கிடைத்த உரிமையையும், அன்பையும் கண்டு அழகியநம்பி திக்குமுக்காடினான். பிரம் நாயகம் ஏதாவது நினைத்துக் கொள்வாரே என்று தயங்கி அவர் பக்கமாகப் பார்த்தான். அவர் வெகு நேரமாகத் 'தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும்

அவனுக்கு என்னவோ போல இருந்தது. -

சரி என்பதா. மாட்டேன் என்பதா-என்ற தயக்கத் தோடு மேரியையும், லில்லியையும் ஏறிட்டுப் பார்த்தான் அவன். அல்லி இதழ்களில் கருதாவற் கணிகளைப் பதித் தற்போன்ற அந்த நான்கு க்ண்கள் ஏக்கத்தோடு அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/53&oldid=596710" இலிருந்து மீள்விக்கப்பட்டது