பக்கம்:பிறந்த மண்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 57

பட்டாற்போலத்தான்.'-குரலின் கடுமை தாங்கமுடியாமல் :பின்னால் திரும்பிப் பார்த்தான். பிரமநாயகம் உலகத்தி லுள்ள ஆத்திரம், கோபம். அத்தனையையும் தம் முகத்தில் தேக்கிக் கொண்டு நின்றார்.

'ஒன்றுமில்லை! என்றாவது ஒய்வு இருக்கிறபோது ஒரு நாள் அவர்களுடைய விட்டுக்கு வரவேண்டும் என்றார்கள். சரி என்று சொல்லி அனுப்பினேன்.” -

"சரிசரி உனக்கு வேறு வேலையில்லை. சாமான்களை எடுத்துக்கொண்டு கப்பலிலிருந்து இறங்குவோம்; வா! சுங்கச் சோதனையை முடித்துக்கொண்டு போவதற்குள் நேரமாகி விடும்"-என்று அதட்டினார் பிரமநாயகம். - "இதோ....சாமான்களை எடுத்துக்கொள்கிறேன்.சுங்கச் சோதனைக்குப் போவோம்’-என்று சாமான்களை எடுத்துக் கொண்டு அவரைப் பின்பற்றிக் கப்பலிலிருந்து கீழே இறங்கினான் அழகியநம்பி. புதிய வாழ்க்கை, புதிய். அனுபவம், நம்பிக்கை நிறைந்த புதிய எதிர்காலம் எல்லாம் ஒன்றுபட்ட புதிய பூமியில் தான் இறங்கி விட்டது போன்ற உண்ர்ச்சி அழகியநம்பிக்கு ஏற்பட்டது. சுமைகள் அவனு. டைய இரண்டு கைகளிலும் தோள்களிலும் மாத்திரம் இருக்கவில்ல்ை. நெஞ்சிலும் இருந்தன. தோள்சுமை, கைச் சுமை ஆகியவற்றுடன் அவற்ற்ைவிடக் கீனமான நெஞ்சச் சுமைகளோடும் அந்தப் புதிய மண்ணில்-கடல் கடந்த இலங்கை மண்ணில் காலை வைத்தான் அவன்.

"அப்பா தம்பி; அழகு! காந்திமதி அம்மனையும் நெல்லையப்பரையும் மனத்தில் தியானித்துக் கொண்டு வலப் பாதத்தை முன்னால் வைத்துக் கீழே இறங்கு..." முன்னால் போய்த்தொலைவில் நின்றுகொண்டு கத்தினார் பிரமதாயகம். - $ - -

அழகியநம்பி அவ்ர் கறியதைக் கேட்டுத் தனக்குள் கிரித்துக்தொன் ஆன். மண்ணில் மிதித்து நடப்பதற்காகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/59&oldid=596722" இலிருந்து மீள்விக்கப்பட்டது