பக்கம்:பிறந்த மண்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பிறந்த மன்

தான் இரண்டு கால்களையும் இரண்டு பாதங்களையும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான். வலது, இடது என்று மனிதர்கள் தாங்களாகக் கற்பித்துக்கொண்ட பேதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்! -

சுங்கச் சாவடியில் சோதனை முடிந்தது. சாமான் களுடன் இருவரும் துறைமுகத்திற்கு வெளியே வந்தனர். துறைமுக வாசலில் நின்று கொண்டு கண்களின் பார்வைக்கு எட்டிய வரை அந்தப் பெரிய நகரத்தின் தோற்றத்தைப் பார்த்தான் அழகியநம்பி. உயர்ந்த கட்டடங்கள், பசுமை யான மரங்கள், போக்கு வரவு மிகுந்த ப்ெரிய வீதிகள், வியாபாரச் செழிப்பும் கூட்டமும் நிறைந்து காணப்படும் கடைகள், மழைக் காலத்து நீர்போல மூலைக்கு மூலை பணம் புழங்கும் செல்வ வளப்பம்; அத்தனையும் அடங்கிய ஒரு பெரிய நக்ரம் அவன் கண்களுக்குத் தெரிந்தது. கார், களும் டிராம் வண்டியும், மக்கள் கூட்டமும் நிறைந்த ஒரு அகன்ற வீதியை எதிரே கண்டான். - - பிரமநாயகம் இரண்டு கூலிக்காரர்களைக் கூப்பிட்டுக் கலிபேசிச் சாமான்களைத் துர்க்கிவிட்டார். "தம்பி இங்கே யிருந்து நம்முடைய கடை இருக்கிற வீதி இரண்டு ப்ர்லாங் குக்குள்ளேயேதான் இருக்கும். காலார நடந்தே போய் விடலாம்" என்றார். - • . - "சரிநடந்தே போய்விடலாம்” என்று தலையசைத் தான் அழகியநம்பி. அப்போது இடுப்பில், கைலியும் கலர்ச் சட்டையும் தலைப்பர்கையும் அணிந்த ஒருவர்,பிரமநாயகத் துக்கு முன்னால் வந்து வணங்கினார். அவன் அதுவர்ை. கேட்டிராத மொழியில் பிரமநாயகத்திடம் சிரித்துக் கொண்டே ஏதோ கூறினார். உடனே பிரமநாயகமும் பதில், வணக்கம் செலுத்திவிட்டு அவர் விசாரித்த அதே மொழியில் அவருக்குப் பதில் சொன்னார்.

அந்தப் புதிய மனிதரிடம் விடைபெற்றுக் கொண்டு. சிறிது தாரம் நடந்ததும், "இவர் நமது கிடைக்குப்புக்கத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/60&oldid=596724" இலிருந்து மீள்விக்கப்பட்டது