பக்கம்:பிறந்த மண்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்ள். பார்த்தசாரதி - - 沮

பின்பு அவனைப் பார்த்து, வா. நாம் போகலாம்’என்று கூறி அழைத்துக்கொண்டு அறைக்கு வெளியே வந்தார்.

அறை வாயிலுக்குத் திரும்பி வந்ததும் அந்தப் பெண் னின் பெயரென்னவென்று அவரிடம் கேட்க நினைத்தான் அழகியநம்பி. ஆனால், அவருடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தபோது அப்போது, அவரிடம் எதையும் கேட்காம லிருப்பதே நல்ல்தென்று ஆவலை அடக்கிக் கொண்டான்.

"குளித்து, சாப்பாட்டை முடித்துக் கொண்டு மற்றக் காரியங்களை அப்புறம் கவனிக்கலாம்’-என்று கடையின் பின்புறத்தை நோக்கி நடந்தார் அவர். பதில் சொல்லாமல் பின்னால் சென்றான் அழகியநம்பி. அந்தச் சமயத்தில் அந்தப் புது இடத்தில், புது மனிதர்களுக்கு நடுவே அதிகம் பேசுவதைவிட அதிகம் சிந்திப்பது அவசியமாயிருந்தது அவனுக்கு. மனிதர்களையும் அவர்களுடைய மனங்களை யும், அறிந்து கொள்வதற்கு, சூழ்நிலைகளைச் சரியானபடி புரிந்துகொள்வதற்குச் சிந்தனை பயன்படுவதுபோலப் பேச்சுப் பயன்படுவதில்லை என்பது அவன் கருத்து.

குளித்துச் சாப்பிட்டதும் பிரயாண அலுப்புத் தீரப் படுத்துத் துரங்கச் சென்றுவிட்டர் பிரமநாயகம். அழகிய நம்பி ஊருக்குக் கடிதம் எழுதித் தபாலில் சேர்த்துவிட நினைத்தான். யார் யாருக்குக் கடிதம் எழுதலாம்? யாருக்கு அவசரமாக, எழுதியாக வேண்டும்?-என்று தயங் கினான்.

'அம்மாவுக்கும் தங்கைக்கும் முதலில் ஒரு கடிதம் அவசரமாக எழுதிப் போடவேண்டும். வந்து சேர்ந்தேனோ இல்லையோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். காந்திமதி ஆச்சிக்கு இப்போது அவசியமாக எழுதவேண்டிய சமாசாரம் ஒன்றுமில்லை. ஆனாலும் வந்து சேர்ந்தேன்என்று ஒரு வரி எழுதிப் போட்டுவைக்கலாம். நண்பர்க்ள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/73&oldid=596750" இலிருந்து மீள்விக்கப்பட்டது