பக்கம்:பிறந்த மண்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. காலிமுகக் கடற்கரை

அழகியநம்பி அந்தக் கடையில் என்ன வேலைகளைச் செய்ய வேண்டுமென்பதை அன்று மாலையே பிரமநாயகம் விளக்கிக் கூறி விட்டார். தன் வேலையையும், அதை யாருக்குக் கீழிருந்து தான் செய்ய வேண்டுமென்பதையும் அறிந்தபோது முதலில் அவன் சிறிது கூச்சமும் தயக்கமும் அடைந்தான்.

"காலையிலே உன்னை அழைத்துக் கொண்டு போய் அறிமுகப்படுத்தினேனே, அந்தப் பெண்ணோடு துணையாக இருந்து அலுவல்கள்ைக் கவனித்துக் கொள்ளத்தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன். அவள் பெயர் பூர்ணா. சிங்கள இனத்தைச் சேர்ந்தவள் அவள். ஒரு மாதிரிப் பண்புடையவள். இந்தக் கடையில் சலுகைகளும் மற்றவர் களை அதிகாரம் செய்யும் உரிமையும்-என்னை விட அவளுக்குத்தான் சற்று அதிகம். தம்பி! அந்தப் பெண் ஆணுக்கு இவ்வளவு ஆதரவும் உரிமையும் இருப்பதற்குக் காரணம் உண்டு. முதல் முதலாக நான் இங்கே வந்தபோது ஒர் உறுதியும் எழுதி வாங்கிக் கொள்ளாமல் எனக்கு ஆயிரக் 'கணக்கில் கடன் கொடுத்துக் கடையும் வைத்துக் கொடுத்தது இந்தப் பூர்ணாவின் தகப்பனார்தான். நான் கடையில் இலாபம் கண்டு வியாபாரத்தில் முன்னுக்கு வந் ததும் அவருடைய கடனை அடைத்துவிட்டேன். ஆனால், அதே சமயம் எனக்குக் கடன் கொடுத்து உதவிய அந்தப் புண்ணியவான் நொடித்துப் போனார். வியரபார சம்பந்த மாக நான் செய்த சில இரகசிய வேலைகள் எல்லாம் அவ ருக்கு நன்றாகத் தெரியும். வியாபாரத்தில் முன்னுக்கு வர வேண்டுமானால் எவ்வளவோ சூழ்ச்சிகளைச் செய்து தானாக வேண்டியிருக்கிறது. ஆனால், பண்புள்ள அந்த மனிதர் என் சூழ்ச்சிகளைக் காட்டிக் கொடுப்பதாகப் பய முறுத்தியோ, வேறு தந்திரத்தை மேற் கொண்டோ, என்னைக் கெடுக்க முன் வரவில்லை. தம்முடைய பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/78&oldid=596760" இலிருந்து மீள்விக்கப்பட்டது