பக்கம்:பிறந்த மண்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி *

கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று வீட்டில் சும்மர் இருக்கிறாள் என்றும் அவளை நான் என் கடையில் கெளரவமாக ஒரு வேலைக்கு அமர்த்திக் கொள்ளவேண்டு மென்றும் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டார். அந்த மனிதரிடம் நான் பட்டிருந்த நன்றிக் கடனைத் தணித்துக் கொள்வதற்காக அவர் பெண்ணை இந்தக் கடை சம்பந்த். மான எல்லா அலுவல்களையும் மேற்பார்க்கவும், வியாபார சம்பந்தமான தபால் போக்குவரவு, மாங்குக் கணக்கு முதலியவற்றைக் கவனித்துக் கொள்ளவும் நியமித்தேன். மறுவருஷமே அந்தப் பெண்ணின் தகப்பனார் எதிர்பாராத விதமாகத் திடீரென்று காலமாகி விட்டார். அவருக்கு அவள் ஒரே பெண்தான்.

தகப்பன்ார் இருக்கிறவரை கடையின் முதலாளியர்கிய எனக்கு அடங்கி ஒடுங்கி நடந்து கொண்டிருந்த அவள் அதன் பிறகு தனிக் கெளரவமும் மமதையும் கொண்டாடத் தொடங்கி விட்டாள். சாதாரணப் பதவியை ஸ்டோர் செகரெட்டரி என்று தானாகவே மாற்றிக் கொண்டு தனி அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டாடத் தொடங்கி; விட்டாள். நான் சொல்லவும் முடியாமல் மறைக்கவும். முடியாமல் சிக்கிக்கொண்டு தவிக்கிறேன். வியாபார இரகசியங்களும் சூழ்ச்சிகளும் தெரிந்த ஒருத்தியை வெளியே அனுப்பிவிட்டால் இன்னொரு நாட்டிலிருந்து இங்கே வந்து வியாபாரத்தில் முன்னுக்கு வந்திருக்கிற எனக்கு எவ். 'வளவோ தொல்லைகள் ஏற்படும். அவன் என்ன செய்தா லும் சரி என்று பேசாமல் பொறுமையோடு நாட்களைக் கடத்திக் கொண்டு வருகிறேன். நரி, இடம் போனா லென்ன? வலம் போனாலென்ன? மேலே விழுந்து கடித் காமல் போனால் சரி என்று அவள் போக்கில் விட்டு விட்டேன். ஆனால், இனியும் தொடர்ந்து அவளை அப்படி விட்டுவிட்டுப் பேசாமல் இருந்து கொண்டிருப்பதில் பயனில்லை, வரவர அவள் போக்கைக் கட்டுப்படுத்தவுே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/79&oldid=596762" இலிருந்து மீள்விக்கப்பட்டது