பக்கம்:பிறந்த மண்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - பிறந்த மண்

முடிவதில்லை. அதுமட்டுமில்லை; என் போக்கைக் கூடக் கட்டுப்படுத்துகிற அளவுக்கு அவள் வளர்ந்து ‘விட்டாள். இந்தச் சில மாதங்களாகவே என் மனித்தில் அவளைப் பற்றிய குழப்பம்தான். தம்பி ஊருக்கு வந்ததும் உன்னைச் சந்தித்ததும், இங்கே என்னோடு அழைத்துக் கொண்டு வந்ததும் என்ன நோக்கத்திற்காக என்பது உனக்கு இப்போது ஒருவாறு புரிந்திருக்கும். திடீரென்று அவளை வெளியே போகச் சொல்விவிட்டு உன்னை அந்த ஸ்தானத் தில் உட்கார்த்திவிடுவேன். ஆனால், அப்படிச் செய்வது சாமர்த்தியமான காரியமில்லை. உனக்கு, என்னுடைய வியாபாரத்துக்கு, எனக்கு, எல்லாவற்றுக்குமே விபரீதமான விளைவுகளை, கண்மூடித் திறப்பதற்குள் அடுக்கடுக்காக உண்டாக்கி விடுவாள் அவள். அவ்வளவிற்கு அவள் சாமர்த்தியக்காரி. - -

உன்னை அவளுக்கு அடங்கிய ஆள்போல் வேலைக்கு அமர்த்தி வைப்பதே அவளைப் படிப்படியாகத் தேவை யற்றவளாக்கி வெளியேற்றப்போவதன் பூர்வாங்க ஏற்பாடு தான் என்பதை நீ புரிந்துகொண்டு வேலை செய்ய வேண்டும். வியாபார சூட்சுமங்கள், கடையின் வரவு செலவு, இலாபக் கணக்குகளை வைத்திருக்கிற விதம், எல்லாவற்றையும் பக்கத்தில் இருந்தே அவளுக்கு அடங்கி ஒடுங்கி வேலை கற்றுக் கொள்கிறவனைப் போல நீ கற்றுக் கொண்டுவிட வேண்டும். இதுவரை அந்த அறையில் அவளைத் தவிர வேறுயாரும் இருந்ததில்லை. ஆனால், இனிமேல் அதே அறையில் அவளுக்குப் பக்கத்தில் இருந்து தான் உன் வேலையைச் செய்யப்போகிறாய் நீ உனக் காகவே ஒரு மேசை நாற்காலியை அந்த அறைக்குள் அவளுக்குப் பக்கத்தில் போட்டுவிடச் சொல்கிறேன். கூச்சம் வெட்கம், தயக்கம் எதுவுமே உன்னிடம் இருக்கக்கூடாது. முழுக்க முழுக்கக் காரியத்தில் கண்ணாக நடந்து கொள்ள வேண்டும். நீ எவ்வளக்கெவ்வளவு விரைவாகவும் சாதுரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/80&oldid=596764" இலிருந்து மீள்விக்கப்பட்டது