84 - பிறந்த மண்
வில் கூட்டத்திற்குக் குறைவிருக்காது."-சோமு இப்படிப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பஸ் வந்து விட்டது.
தெகிவளைக்குப் போகிற சாலை வெள்ளவத்தையை அடைகிறவரை கடற்கரையோரமாகவே சென்றது. சாலை யின் வலக் கைப்புறம் நீலக் கடல் பரந்து கிடந்தது. மற்றொருபுறம் உயர்ந்த கட்டடங்கள் தெரிந்தன. 'போய் விட்டு நாம் இங்கேதான் திரும்பி வரவேண்டும். இதுதான் கட்ற்கரை, இந்த இடத்துக்குக் காவிமுகம்’ என்று பெயர்"என்று பஸ்ஸில் போகும்போதே கடற்கரையைச் சுட்டிக் காட்டினான் சோமு, -
தெகிவளைக்குப் போய் மிருகக்காட்சி சாலையைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது மணி ஐந்தரைக்கு மேல் ஆகிவிட்டது. அழகான பெரிய தோட்டத்துக்கு நடுவே ஏற்றமும் இறக்கமுமான பகுதிகளில் காட்சி சாலை அமைந்திருந்தது. -
மனிதர்களின் திறமை, விலங்குகளின் திறமையைத் தன்னுடைய காட்சியின்பத்துக்காக அங்கே அடக்கி வைத்திருப்பதை அவன் கண்டான். -
மறுபடியும் அங்கிருந்து பஸ் பிடித்துக் காலிமுகக் கடற் கரையில் வந்து இறங்கியபோது பொழுது சாய்ந்துவிட்டது. அந்த நேரத்தில் அந்தக் கடற்கரை தனிப்பட்ட அழகுடன் விளங்கியது. திருச்செந்தூரிலும் தூத்துக்குடியிலும் கடற் கரையில் மணற் பரப்பைத்தான் அவன் கண்டிருக்கிறான். கொழும்பு-காலிமுகக் கடற்கரையிலோ, மரகதப் பாய் விரித்ததுபோல் புல்வெளியைக் கண்டான் கடற்கரைக்கு எதிரே பிரமாண்ட்மான அரசாங்கக் கட்டடங்களும், அப்பால் நகரத்தில் உயரமும் தாழ்வுமான கட்டடங்களின் உச்சிகளில் தெரியும் பல நிற மின்சார விளக்குகளும் வியாபாரங்களும் தூரத்து. ஒவியம் போல் தெரிந்தன. மணி அடித்து ஓய்ந்ததும் அடங்கி மெதுவாக ஒலிக்கும் அதன்