பக்கம்:பிறந்த மண்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 83

பொருட்காட்சி சாலை முழுவதையும் சோமு அழகிய நம்பிக்குச் சுற்றிக் காட்டினான். சரித்திர சம்பந்தமான சிலைகள், மிருகங்களின் எலும்புக் கூடுகள், அரசர்கள் உபயோகப்படுத்திய ஆயுதங்கள், ஆடம்பரப் பொருள்கள், எல்லாவற்றையும் வரிசையாக அங்கே கண்டான் அழகிய நம்பி. அற்புதமும் வியப்பும், புதுமையும் நிறைந்த ஓர்' உலகத்திற்குத் திடீரென்று வந்துவிட்டதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது அவனுக்கு. இறந்த பிராணிகளின் உடல்களைப் பாடம் செய்து கெட்டுப்போகாமல் தைலங்களில் இட்டு வைத்திருந்த ஒரு பகுதியைப் பார்த்துக்கொண்டே வந்த போது மட்டும் அழகிய நம்பியின் மனத்தில் அருவருப்பு நிறைந்த ஒர் உணர்ச்சி ஏற்பட்டது. செத்த உடல்களைச். சாகாத உடல்கள் பார்ப்பதில்கூட ஒர் இன்பமா? ساده تنگی نتی ஒரு பொருட்காட்சியா? மனித உள்ளம் உயிரோடு வாழும் அழகை மட்டும் வார்க்க விரும்பவில்லை. உயிரிழந்து கிடப்பதையும் பார்த்து மகிழ வேண்டுமென்ற சண் நோக்கு மனிதனுக்கு அல்லது மனித இனத்துக்கு எங்கோ ஒரு மூலை யில் இருக்கிறது. இருக்கத்தான் வேண்டும். -

பொருட்காட்சி சாலையைப் பார்த்து முடித்துவிட்டு இருவரும் வாசலுக்கு வந்தனர். -

"மிருகக் காட்சி சாலை, தெகிவளை என்ற இடத்தில் இருக்கிறது. அதற்கும் இந்த வழியாகவே பஸ் டோகிறது. பஸ் வரட்டும். அதுவரை இங்கேயே நிற்போம்-என்று வாயிலில் வந்ததும் சொன்னான் சோமு. -

'ஏனப்பா சோமு இந்த ஊரில் அதிக நேரம் மனிதர்கள் வீட்டிலேயே தங்கமாட்டார்களோ! எந்த நேரமும் எந்த வீதியிலும் ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம் அலை மேர்துகிறதே?" என்று தன் மனத்தில் அவ்வளவு நேரம்ாகக் கனத்துப்போயிருந்த ஒரு கேள்வியைக் கேட்டான் அழகிய நம்பி. இந்த ஊரில் எப்போதுமே. அப்படித்தான். உச்சி வெயில் மண்டையைப் பிளந்துகொண்டிருந்தாலும் தெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/85&oldid=596774" இலிருந்து மீள்விக்கப்பட்டது