பக்கம்:பிறந்த மண்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - பிறந்த மண்

மாவது வட்டித் தொகையையும் கொடுக்கவில்லை. இன் மேல் உங்களிடம் கொடுப்பதற்குத்தான் என்ன இருக்கிகதி: இடிந்த சுவரும், செங்கல் பெயர்ந்த தரையுமாக இந்த வீடு ஒன்று மீதமிருக்கிறது. இன்றைக்கெல்லாம் கூவின்கூவி விற்றாலும் எழுநூறு ரூபாய்க்குமேல் போகாது. பிள்ளை யையும் அக்கரைச் சீமைக்கு அனுப்பிவிட்டீர்கள். வட்டியும் முதலுமாக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயைக் கொடுத்து விட்டு நான் தலையில் துணியைப் போட்டுக்கொண்டு போக வேண்டும் போலிருக்கிறது.' -

வட்டிக் கடைக்காரரின் பேச்சில் படிப்படியாக அந்தத் தொழிலுக்கே உரிய அழுத்தம் ஏறிக்கொண்டிருந்தது. *அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் ஐயா! இனிமேல் மாதா மாதம் அவன் ஏதாவது அனுப்புவான். மொத்த மாக அடைத்துத் தீர்க்க முடியாவிட்டாலும் உங்கள் கடன்ைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிடுகிறோம்.' அந்த அம்மா அவன்ர்ச் சமாதானப்படுத்திக் கெஞ்சுகிற பாவனையில் பேசினாள்.

இதோ பாருங்கள்;நான் வட்டிக்கடைக்காரன். தயவு தாட்சணியம் காட்டி நாலுபேரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற அவசியம் எனக்கில்லை. ஆரம்ப முதல் இந்தத் தொழிலில் கெட்டபெயர்தான் வாங்கியிருக்கிறேன். குடிகெடுப்பவன், கருமி என்று எத்தனையோ விதமாக மரில் பேசிக் கொள்கிறார்களாம். இனிமேல் நல்ல .ெய ரெடுத்து எனக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை. எனக்கு வாரும் வள்ளல் பட்டம் கட்டவேண்டாம்...' சம்பந்தத் தோடும், சம்பந்தமின்றியும் தெருவில் போவோர் வருலோ ருக்குக் கூடக் கேட்கும் குரலில் இரைந்து கூப்பாடு போடத் தொடங்கிவிட்டார் அவர்.

கோபித்துக் கொள்ளாதீர்கள்; பார்த்துக் கொடுத்து விடுகிறோம். எங்கள் குடும்பநிலை உங்களுக்குத் தெரியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/90&oldid=596784" இலிருந்து மீள்விக்கப்பட்டது