பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் 83| முதல் இராசராச சோழன் தஞ்சைமா நகரில் எடுப் பித்த இராசராசேச்சுரம் என்னும் பெரிய கோயிலில் குந்தவைப்பிராட்டி, தன் தந்தை சுந்தரசோழன் படிமத் தையும் தாய் வானவன் மாதேவியின் படிமத்தையும் எழுந் தருளுவித்து அவற்றிற்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்த மாகப் பெரும்பொருள் வழங்கியுள்ளமை ஈண்டு அறியற் பாலதாம் 1. அன்றியும், அவ்வம்மை, தஞ்சையம்பதி யில் தன் தந்தையின் பெயரால் சுந்தரசோழ விண்ணகர் ஆதுரசாலை என்ற மருத்துவ நிலையம் ஒன்று நிறுவி அதனை நடத்திவருவதற்கு மருத்துவக் காணியாக நிலமும் அளித்துள்ளனள் 2. தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள உலகபுரம் என்ற ஊரில் சுந்தரசோழப் பெரும்பள்ளி என்னும் புத்த கோயில் ஒன்றும் 3 எண்ணாயிரம் என்ற ஊரில் சுந்தர சோழ விண்ணகர் என்ற திருமால் கோயில் ஒன்றும் 38 வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள பிரமதேசம் என்ற ஊரில் சுந்தரசோழப் பேரேரி என்னும் ஏரி ஒன்றும் புதுக் கோட்டை நாட்டில் திருமெய்யந் தாலூகாவில் சுந்தர சோழபுரம் என்னும் நகரம் ஒன்றும் இருந்தன என் பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. அவை யெல்லாம் இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் அமைக்கப் பெற்றனவாதல்வேண்டும். அவற்றுள், சுந்தரசோழபுரம் என்பது இக்காலத்தில் சுந்தரம் என்று வழங்குகிறது. அவற்றை யெல்லாம் நுண்ணிதின் நோக்குமிடத்து, இவன், தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் மக்கட்குப் பல்வகை நலங்களும் புரிந்து புகழுடன் செங்கோல் செலுத்தி வந் தான் என்பது இனிது புலனாகும். 1; S. I. I., Vol. II, No: 6. 2. Ins. 248 and 249 of 1923. 3. Ins. 141 of 1919. 3A. 335 of 1917. 4. Ins. 264 of 1915. 5. Inscriptions of Pudukkottai State, No. 189.