பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பிற்காலச் சோழர் சரித்திரம் ஆதித்த கரிகாலனை இழந்தமையால் ஆற்றொணாத் துன் பத்தில் ஆழ்ந்து அவ்வாண்டிலேயே காஞ்சிமா நகரி லிருந்த பொன் மாளிகையில் 1 உயிர்துறந்தான். அது பற்றியே, இவ்வேந்தன் ' பொன் மாளிகைத் துஞ்சின தேவர் ' என்று சில கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட் டுள்ளனன். இவன் மனைவியருள் வானவன் மாதேவி என் பாள், தன் கணவன்பால் அளவற்ற அன்புடையவளாத லின் பிரிவாற்றாமல் தானும் உடன் கட்டையேறி ஒருங்கே மாய்ந்தனள். அம் மாதேவியின் செயற்கருஞ் செயல் திரு வாலங்காட்டுச் செப்பேடுகளில் சொல்லப்பட்டுளது. 3 அன்றியும், திருக்கோவலூரிலுள்ள கல் வெட்டொன்று 4 வானவன் மாதேவி நிகழ்த்திய அவ் வருஞ்செயலை எடுத்துக்கூறி,

  • செந்திரு மடந்தைமன் சீராஜ ராஜன் இந்திரசமானன் இராஜசர்வஞ்ஞனெனும் புலியைப் பயந்த பொன்மான் கலியைக் கரந்து கரவாக் காரிகை சுரந்த முலைமகப் பிரிந்து முழங்கெரி நடுவணும் தலைமகற் பிரியாத் தையல் நிலைபெறுந் தூண்டா விளக்கு........ ............மணிமுடி வளவன் சுந்தரசோழன் மந்தரதாரன் திருப்புய முயங்குந்தேவி'

என்று பாராட்டுவது உணரற்பாலதாகும். அம் மாதேவி, தன் இளங்குழந்தையைப் பிரிந்து கணவனோடு உடன் கட்டை ஏறிய செய்தியைக் கூறும் ' சுரந்த, முலைமகப் பிரிந்து முழங்கெரி நடுவணுந் - தலைமகற் பிரியாத் தையல்' என்ற பகுதி, படிப்போர் உள்ளத்தை உருக்குந் தன்மை யது. 1. S. I. I., Vol. III, No. 142. 2. Ibid, Vol. II, No. 6 ; Ibid, Vol. V, Nos. 723 and 980. 3. Ibid, Vol. III, No. 205 Verses 65 & 66. 4. Ibid, Vol. VII, No. 863.