பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் இனி, வீரசோழிய உரையிற் காணப்படும் அப்பழைய பாடல்கள், இவனை ' மேதகு நந்திபுரி மன்னர் சுந்தரச் சோழர்' என்றும் ' பழையாறை நகர்ச் சுந்தரச் சோழர்' என்றும் கூறுகின்றமையின் இவன் பழையாறை நகரி லிருந்து ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றது. அந்நகர், கும்பகோணத்திற்குத் தென் மேற்கே மூன்று மைல் தூரத்தில் பழையாறை என்னும் பெயருடன் இந்நாளில் ஒரு சிற்றூராக உள்ளது. அச் சிற்றூரையும் அதனைச் சூழ்ந்துள்ள முழையூர், பட்டீச்சுரம் திருச்சத்திமுற்றம், சோழமாளிகை, அரிச்சந்திரபுரம், ஆரியப் படையூர், பம்பைப் படையூர், புதுப்படையூர், மணப் படையூர். கோணப்பெருமாள் கோயில், திருமேற்றளி, தாராசுரம், நாதன் கோயில் என்று வழங்கும் நந்தி புரவிண்ணகரம் ஆகிய ஊர்களையும் தன்னகத்துக்கொண்டு முற்காலத்தில் பெரிய நகரமாக அஃது அமைந்திருந் தது என்பதைத் தேவாரப்பதிகங்களாலும் அவ்விடங் களில் "காணப்படும் கல்வெட்டுக்களாலும் அறியலாம், அன்றியும், சேக்கிழாரடிகள், ' தேரின்மேவிய செழுமணி வீதிகள் சிறந்து-பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை' என்று அதனைப் பெருநகராகவே கூறி யிருப்பதும் அறியத்தக்கது. அம் மாநகர் வெவ்வேறு அரசர் காலங்களில் வெவ்வேறு. பெயர்களை எய்தி மிகச் சிறப்புற்றிருந்தது என்பது வெறும் புனைந்துரை யன்று. அது, கி. பி. ஏழாம் நூற்றாண்டில் பழை யாறை நகர் எனவும் எட்டாம் நூற்றாண்டில் நந்திபுரம் எனவும் ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் பழையாறை நந்திபுரம் எனவும் பதினொன்றாம் நூற்றாண்டில் முடிகொண்ட சோழபுரம் எனவும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இராச ராசபுரம் எனவும் வழங்கப்பெற்றது என்பதைப் பண் டைத் தமிழ் நூல்களும் கல்வெட்டுக்களும் நன்குணர்த்து கின்றன. அந்நகரில் அக்காலத்தில் சோழ மன்னர்களின் அரண்மனை அமைந்திருந்த இடம், இக்காலத்தில் சோழ 1. பெரிய புராணம்-அமர்நீதி நாயனார் புராணம், பா. 1.