பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. ச் சோழர் சரித்திரம் மானிகை என்னும் ஒரு தனியூராக உளது. அவ்வரண் மனைவைச் சுற்றிலும் முன்னிருந்த நான்கு படைவீடுகள் இப்போது நான்கு ஊர்களாக இருக்கின்றன. எனவே, சோழர் காலங்களில் அது பெரிய நகரமாயிருந்ததோடு அவ்வேந்தருட் சிலர்க்கு இரண்டாவது தலை நகராக இருந்து புகழெய்தியது என்பதும் அறியற்பாலதாகும்' . 1. செந்தமிழ் 43.ஆம் தொகுதி 4, 5-ஆம் பகுதிகளில் யான் எழுதியுள்ள பழையாறை நகர் என்னுங் கட்டுரையில் இம் மா நகரைப் பற்றிய செய்திகளை விளக்கமாகக் காணலாம்.