பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 முதல் இராசராச சோழன் பேரரசனாதற்குரிய உத்தம இலக்கணங்கள் அமைந்த உட லமைப்புடையவனாய் இளமையில் திகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது இனிது புலனாகின்றது. இவனுடைய பெற்றோர்கள் இவனுக்கு இட்டுவழங்கிய பெயர் அருண்மொழிவர்மன் என்பது.. இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதல் இவனுக்கு இராசராசன் என்னும் பெயரே வழங்கிவந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியப் படுகிறது. இவனது ஆட்சியின் நான்காம் ஆண்டில் செங்கற்பட்டு ஜில்லா மதுராந்தகத்தில் வரையப்பெற் றுள்ள கல்வெட்டொன்று இவனைக் ' காந்தளூர்ச்சாலைக் கல மறுத்தருளிய கோ இராசகேசரிவர்மன் ' என்று கூறு கின்றது. ஆகவே, அவ்வாண்டிற்கு முன்னரே காந்தளூர்ப் போர் நிகழ்ந்ததாதல் வேண்டும். எனவே, இவன் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டாகிய கி. பி. 988-ல் சேரனையும் அவனுக்கு உதவிபுரியவந்த பாண்டியனையும் காந்தளூர்ப் போரிற் புறங்கண்டு வாகை சூடினான் என்பது தெள்ளிது. அவ் வெற்றியின் பயனாக, இவன் அவ் வேந்தர்களின் இருமுடிகளையும் கைப்பற்றிக் கொண்டு மும்முடிசோழன் என்னும் சிறப்புப் பெயரும் எய்தினான். அந்நாள் முதல் அரசர்க்கரசன் என்று பொருள்படும் இராசராசன் என்னும் சிறப்புப் பெயரும் இவ்வேந் தனுக்கு உரியதாயிற்று. பிறகு, இப்பெயர், இவனுக் குரிய இயற்பெயராகவே வழங்கிவந்தது எனலாம். ஆகவே கி. பி. 988 முதல் இவன் வாணாள் முழுமையும் இராசராசன் என்றே வழங்கப்பெற்றனன் என்பது உணரற்பால தாகும். இனி, இம்மன்னன் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பல் வகைப்பணிகள் புரிந்தமை பற்றித் தில்லை வாழந்தணர்கள் கி. பி. 1004-ஆம் ஆண்டில் இவனுக்கு இராசராசன் 2, Ins. 56 of 1913 1. S. I. I., Vol. V, Verse 61. 3. Ins, 395 of 1922.