பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் கொண்ட இராசகேசரி, பரகேசரி என்னும் பட்டங்களுள் இவ்வரசன் இராசகேசரி - என்ற பட்டம் பூண்டு ஆட்சி புரியத் தொடங்கினான். பிற்காலச் சோழர்குல முதல் வனாகிய விசயாலய சோழனால் அடிகோலப்பட்ட சோழ இராச்சியம் இராசராச சோழன் ஆட்சியில் தான் உயர் நிலையை எய்திற்று. இவன் இயற்கையில் ஒப்பற்ற ஆற்றலும் வீரமும் நுண்ணறிவும் படைத்தவனாயிருந் தமையோடு சற்றேறக்குறைய முப்பது ஆண்டுகள் வரையில் ஆட்சிபுரியுமாறு நீடிய ஆயுளைப் பெற்றிருந்தமையும் சோழ இராச்சியம் இவன் ஆட்சியில் யாண்டும் பரவிப் பெருகுவதற்குக் காரணமாயிருந்தது எனலாம். இவன் புதல்வன் இராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் சோழ இராச்சியம் மிகப் பெருகிக் கடல்கடந்தும் பரவி யிருந்ததாயினும் அதற்கு அடிகோலி வைத்தவன் நம் இராசராச சோழனே யாவன். அறிவும் அன்பும் நிறைந்த அரசியல் அதிகாரிகளையும் வீரஞ்செறிந்த படைத்தலைவர் களையும் இவன் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆட்சி நடத்தி யமையே இவன் எக்கருமங்களையும் எளிதில் நிறைவேற்று வதற்கு ஏதுவாக இருந்தது என்பது ஒருதலை. இவனை இளமையில் வளர்த்தவர்கள் முதல் கண்டரா தித்த சோழன் மனைவியாகிய செம்பியன் மாதேவியும் இவன் தமக்கையாகிய குந்தவைப் பிராட்டியும் ஆவர். அவர்கள் சிவபக்தி, சமயப்பொறை முதலான உயர் குணங்கள் பலவும் ஒருங்கே அமையப்பெற்றவர்கள். அத்தகையாரது அன்பு கலந்த அறிவுரைகளை நாள் தோறும் கேட்டு ஒழுகிவந்தமையே இவன் சைவசமய வளர்ச்சி யிலும் சிற்பம், ஓவியம், இசை முதலான கலை வளர்ச்சி யிலும் பெரிதும் ஈடுபட்டுச் சமயப்பொறை யுடையவனாய் வாழ்ந்துவந்தமைக்குக் காரணமாகும். முற்காலத்தில் பாண்டியரும் பல்லவரும் பிறர்க்கு இறையிலியாக நிலங்கள் வழங்குங்கால் அவ்வறச் செயல்