பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பிற்காலச் சோழர் சரித்திரம் களைச் செப்பேடுகளில் எழுதுவித்து உரியவர்க்கு அளிப்பது வழிவழி வந்த வழக்கமாகும். அவர்கள் அங்ஙனம் செய்யும் போது அச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாற்றை முதலில் எழுதுவித்து, பின்பு தாம் புரிந்த அறச்செயல் களைக் குறிபிட்டுவந்தனர் என்பதை அன்னோர் ஆட்சிக் காலங்களில் வெளியிடப்பெற்ற செப்பேடுகளால் நன்கறிய லாம். இராசராச சோழனுடைய தந்தையாகிய இரண்டாம் பராந்தக சோழனும் அம்முறையைப் பின்பற்றிய செய்தி அவனது அன்பிற் செப்பேடுகளால் அறியக்கிடக் கின்றது. தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுண்மைகளை நன்கு விளக்கும் மெய்க்கீர்த்தியை இனிய தமிழ் மொழியில் அகவற்பாவில் அமைத்துத் தன் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை முதலில் மேற் கொண்ட பெருவேந்தன் நம் இராசராச சோழனே ஆவன். இவனுக்குப் பிறகு இவன் வழியில் வந்த சோழர்களும் பிறமன்னர்களும் அச்செயலைப் போற்றித் தாமும் மேற் கொள்வாராயினர். எனவே, அரசர்கள் தம் மெய்க்கீர்த்தி களைக் கல்வெட்டுக்களில் எழுதும் வழக்கம் முதலில் இராசராச சோழன் காலத்தில் தான் உண்டாயிற்று என்பதும் அதற்கு முன்னர் அஃது இல்லை என்பதும் அறியற்பாலனவாகும். மெய்க்கீர்த்திகள்1 கூறுவனவெல்லாம் வெறுங் கற் பனைச் செய்திகள் அல்ல. அவை, அவ்வவ்வேந்தர்களின் ஆட்சிக்காலங்களில் நிகழ்ந்த உண்மைச் செய்திகளையே உணர்த்துகின்றன. சில அரசர்கள் ஒன்றுக்கு- மேற் பட்ட மெய்க்கீர்த்திகளை யுடையவராகவும் இருப்பதுண்டு. ஒவ்வொரு வேந்தனுடைய மெய்க்கீர்த்தியும் வெவ்வேறு


1. மெய்க்கீர்த்தியின் இலக்கணங்களைப் பன்னிரு பாட்டியலிலுள்ள சூத்திரங்களாலும் வச்சணந்திமாலை வெண்பாப் பாட்டியலாலும் நன் குணரலாம்.