பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பிற்காலச் சோழர் சரித்திரம் யில் வைக்கப்பெற்றிருந்த தன் தூதனையும் விடுவித்தான். இவன் தன் தூதனை அந்நகரில் சேரன் சிறையில் வைத் திருந்தமைபற்றியே இத்தகைய அழிவு வேலைகளைப் பெருங் கோபத்தினால் அங்குச் செய்துவிட்டான் என்பது வெளிப்படை. பிறகு தென்கடற்கோடியிலுள்ள விழிஞத் திலும் பெரும்போர் நடைபெற்றது. அப்போரிலும் சேர நாட்டு வீரர்கள் தோல்வியுற்றுப் புறங்காட்டி யோடவே, இராசராசன் வெற்றியெய்தி அந்நாட்டைக் கைப்பற்றி னான். சேர நாட்டுப் போர் நிகழ்ச்சிகளும் ஒருவாறு முடிவுற்றன. இவன் வெற்றித்திருவை மணந்து அந் நாட்டில் தங்கியிருந்த நாட்களில் இவன் பிறந்த நாள் விழாவும் வரநேர்ந்தது. ஆகவே, தான் பிறந்த சதய நாள் விழாவை அந்நாட்டில் மிகச் சிறப்பாக நடத்தினான். அன்றியும், ஆண்டுதோறும் அவ்விழா சேர நாட்டில் நடை பெறுமாறும் இவன் தக்க ஏற்பாடு செய்தான்.! பிறகு, இவ்வேந்தன் அந்நாட்டிலிருந்து சோணாட்டிற்குத் திரும் (b) ' சதய நாள் விழா உதியர்மண்டலந் தன்னில் வைத்தவன் தனியொர் மாவின்மேல் உதய பானுவொத் துதகை வென்றகோன் ஒருகை வாரணம் பலகவர்ந்ததும்' (கலிங்கத்துப்பரணி, பாடல் 201) (c) ' சாரல் மலையட்டுஞ் சேரன்மலைஞாட்டுத் தாவடிக்குவட்டின் பாவடிச்சுவட்டுத் தொடர்நெய்க் கனகம் துகளெழ நெடுநற் கோபுரங் கோவை குலைய மாபெரும் புரிசைவட்டம் பொடிபடப் புரிசைச் சுதைகவின்படைத்த சூளிகை மாளிகை உதைகைமுன் னொள்ளெரி கொளுவி உதைகை வேந்தைக் கடல்புக வெகுண்டு ' இது திருக்கோவலூரிலுள்ள முதல் இராசராசசோழன் காலத்துக் கல்வெட்டு ; அகவற்பாவில் அமைந்தது. (S. I. I., Vol. VII, No. 863) 1. கலிங்கத்துப்பரணி, பாடல் 201.