பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 105 புங்கால் பொற்குவியலும் களிற்று நிரைகளும் மிகுதியாகக் கொணர்ந்தனன் 1. அப்போர் நிமித்தம் சேர நாட்டிற்குச் சென்றிருந்த படைத் தலைவர்களுள் ஒருவனான கம்பன் மணியன் ஆகிய விக்கிரமசிங்க மூவேந்தவேளான் என்பவன், அங்கிருந்து இராசராசசோழன் கொண்டுவந்த கடவுட் படிமங்கள் பலவற் றுள் மரகததேவர் படிமத்தை அரசனிடம் பெற்று, அதனைத் திருப்பழனத்திலுள்ள சிவன் கோயிலில் எழுந்தருளுவித் தான் என்று அவ்வூர்க் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. 2 அக் கல்வெட்டில் சொல்லப்பட்ட கடவுட்படிமம் நவமணிக ளுள் ஒன்றாகிய மரகதத்தால் செய்யப்பெற்றதாதல் வேண்டும். அதில் பொதுவாக மரகததேவர் என்று குறிப்பிடப்பட்டிருத்த லாலும் இக்காலத்தில் அப்படிமம் அக்கோயிலில் காணப்படா மையாலும் அஃது எந்தக் கடவுளுடைய படிமம் என்பது புலப்படவில்லை. இனி, திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இராசராச சோழனது போர்ச் செயல்களைப்பற்றிக் கூறுஞ் செய்திகள் ஆராயற்பாலன. இவன் தென் திசையிலிருந்து தன் திக்கு விசயத்தைத் தொடங்கினான் என்றும் அப்போது பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த பாண்டியன் அமர புயங்கன் என்பவன் முதலில் தாக்கப்பட்டான் என்றும் அவன் போரில் தோல்வியுறவே அந்நாடு இவ்வேந்தனால் கைப்பற்றப்பட்டதென்றும் அச் செப்பேடுகள் கூறுகின்றன 3. இராசராசன் சேர நாட்டின் மேல் படையெடுத்துச் சென்ற போது இவனை இடையில் தடுத்துப் போர் செய்தவன் அவ் வமர புயங்கனே யாவன். அக்காரணம் பற்றியே இவன் தன் திக்கு விசயத்தின் போது முதலில் அப் பாண்டியனைத் தாக்கிப் போரில் வென்று அவனது நாட்டையும் கைப்பற்றிக் கொண் 1. Ins. 443 of 1918. 2. Ins. 135 of 1928. 3. S. I. I., Vol. III, No. 205, Verses 76 - 79.