பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பிற்காலச் சோழர் சரித்திரம் டான் என்பது ஈண்டுணரற் பாலது. இவன் கல்வெட்டுக்கள் எல்லாம் ' செழியரைத் தேசுகொள் கோவிராச கேசரி வர்மன்' என்று கூறுவதால் இவன் பாண்டியர்களை வென்று முற்றும் அடக்கினமை பெறப்படுகிறது. ' செழியர்' என்று பன்மை யில் குறிப்பிடுவதால் ஒருவர்க்கு மேற்பட்ட பாண்டிய மன்னர் களை இவன் வென்றிருத்தல் வேண்டும் என்பது உய்த் துணரப் படுகிறது. அன்றியும், தஞ்சை இராச ராசேச்சுரத்தி லுள்ள இவன் கல்வெட்டுக்கள், ' மலை நாட்டுச் சேரமானையும் பாண்டியர்களையும் எறிந்து' என்று கூறுவதால் இவன் காலத்தில் பாண்டியர் சிலர் இருந்தனர் என்பதும் அவர்கள் எல்லோரையும் இவன் வென்று அடக்கி விட்டனன் என்பதும் நன்கு வெளியாதல் காண்க. திருவாலங்காட்டுச் செப்பேடு களில் கூறப்பெற்ற பாண்டியன் அமரபுயங்கன் என்பவன் அந்நாட்களிலிருந்த பாண்டியர்க்குத் தலைவன் போலும். இராசராச சோழனுக்குப் பாண்டிய குலாசனி என்னும் சிறப்புப் பெயர் இருப்பதாலும் பாண்டி மண்டலம் இராசராச மண்டலம் என்று அக்காலத்தில் வழங்கப்பெற்றமையாலும் இவ்வேந்தன் கல்வெட்டுக்கள் இவனது ஆட்சியின் எட்டாம் ஆண்டு முதல் பாண்டி நாட்டில் காணப்படுதலாலும், போர் நிகழ்ச்சிக்குப் பிறகு அந்நாடு இவனது ஆட்சிக்கு உட்பட்டு விட்டது என்பது ஒரு தலை. இராசராச சோழன் தன் திக்குவிசயத்தில் முதலில் நிகழ்த்தியது பாண்டி நாட்டுப்போர் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உணர்த்தா நிற்க, இவன் கல்வெட்டுக்கள் காந் தளூர்ச்சாலையில் கலமறுத்த இவனது சேர நாட்டுப் போரையே முதலில் கூறுகின்றன. இராசராசன் நடத்திய சேர நாட்டுப் போர் பாண்டி நாட்டுப் போர் ஆகிய இரண்டினுள் எது முத லில் நடைபெற்றது என்பது பற்றிச் செப்பேடும் கல்வெட்டும் 1. S. I. I., Vol. II, No. 59.