பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பிற்காலச் சோழர் சரித்திரம் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியினால் அறியப் படுகிறது. ஈழமண்டலத்தில் அப்போது ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன் கி. பி. 981-ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனேயாம்' - அவன் இராசராச சோழனுக்குப் பகைஞராயிருந்த பாண்டியர்க்கும் சேரனுக்கும் உற்றுழி யுதவிவந்தனன். அதுபற்றியே, இராசராசன் ஈழமண்டலத்தின் மீது படையெடுத்துச் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது எனலாம். அப் படையெழுச்சியிலும் தலைமை வகித்துச்சென்றவன் இவன் புதல்வனாகிய இராசேத்திர சோழனேயாவன். கி. பி. 991-ல் ஈழமண்டலத்தில் படைவீரர்களால் குழப்பம் உண்டாகவே, அரசனாகிய ஐந்தாம் மகிந்தன் என்பான் அதனையடக்கும் ஆற்றலின்றி 2 அம்மண்டலத்துள் தென்கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு ஓடிவிட்டான். எனவே, சோழநாட்டுப் படை அம்மண்டலத்தின் வடபகுதியை எளிதில் கைப் பற்றிக் கொண்டது. அன்றியும், அந்நிலப்பரப்பு மும்முடி சோழ மண்டலம் என்று பெயரிடப் பெற்று 3 இராசராச சோழன் ஆட்சிக்கு உள்ளாக்கப்பட்டது. 'முரட்டொழில் சிங்களர் ஈழமண்டலம்' என்றும் 'எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும்' என்றும் இவன் மெய்க்கீர்த்திகள் கூறுவன வற்றைக் கூர்ந்து நோக்குங்கால், ஈழநாட்டுப்போரில் வலி மிக்க சிங்கள வீரர்கள் பேராற்றல் காட்டிப் போர் புரிந் தனர் என்பதும் அத்தகையாரைச் சோணாட்டுப்படை வென்று அவர்களது நாட்டைக் கைப்பற்றியமை இராச ராசனுக்கு யாண்டும் பெரும் புகழை யுண்டுபண்ணியது என்பதும் நன்கு வெளியாகின்றன. பண்டைக்கால முதல் ஈழமண்டலத்தின் தலை நகராக விளங்கிய அநுராதபுரம் போரில் சோழரால் அழிக்கப் பட்டமையால் அம்மண்டலத்தின் நடுவணுள்ள பொலன் 1. Ep, Zeylanica, Vol. II, No. 1. 2. The Colas, Vol.1, Page 205. 3. S. I. I., Vol. II, No. 92.