பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பிற்காலச் சோழர் சரித்திரம் சிறப்புப் பெயரால் மும்முடி சோழ மண்டலம் என்று அந் நாளில் வழங்கப்பெற்று வந்தது என்பதும் மாதோட்ட நகரம் இராசராசபுரம் என்னும் மற்றொரு பெயரும் பெற்றிருந்தது என்பதும் அக்கல்வெட்டால் வெளியாதல் காண்க. சோழர்க் குத் தலை நகராயிருந்த பொலன்னருவா என்னும் ஊரில் சிவாலயம் ஒன்று கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் சிற்பவமைதியை நோக்குங்கால் கி. பி. பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் கட்டப்பெற்ற சோழர் காலத்துக் கோயில் களைப் போல் அஃதும் அமைந்துள்ளது என்பது தெளிவாம். ஆகவே, இராசராச சோழனே அக்கற்றளியை எடுப்பித்திருக் கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அக் கோயிலுக்கு வானவன் மாதேவீச்சுரம் என்னும் பெயர் 1 இருத்தலால் தன் தாயாகிய வானவன் மாதேவியை நினைவு கூர்தற் காரணமாகத் தலை நகராகிய பொலன்னருவாவில் இராசராச சோழன் அதனை எடுப்பித்திருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக்கிடக்கின்றது. ஈழ மண்டலத்தில் காணப்படும் இராசராசன் கல்வெட்டுக்களும் அஃது இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பதை வலியுறுத்துகின்றன. 3 இவ்வேந்தன் தஞ்சைமா நகரில் தான் எடுப்பித்த பெருங் கோயிலாகிய இராசராசேச்சுரத்திற்கு ஈழ மண்டலத்திலும் சில ஊர்களை நிவந்தமாக அளித்துள்ளனன் என்பது அக் கோயிலிற் காணப்படும் கல்வெட்டுக்களால் புலப்படுகின் றது 4. எனவே, ஈழ மண்டலம் இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தா லன்றி அவ்வூர்களை அக்கோயிலுக்கு நிவந்தமாகவிட்டிருக்க இயலா தன்றோ ? இனி, தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள கல்வெட்டொன் றில் சத்தியாசிரயனை எறிந்து எழுந்தருளி வந்து ஸ்ரீபாத புஷ்பமாக அட்டித் திருவடி தொழுதன' என்ற தொடர் 1. S. I. I., Vol. IV, No. 1388. 2. The Colas, Vol. I, Page 206. 3. S. I. I., Vol. II, No. 92.