பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 113 கள்! காணப்படுகின்றன. இராசராச சோழனது ஆனை மங்கலச் செப்பேடுகளும் இவன் சத்தியாசிரயனை வென்ற செய்தியைக் குறிப்பிடுகின்றன 2. அன்றியும், சத்தியா சிரயன், இராசராசனது கடல் போன்ற பெரும்படையைக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தைவிட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன 3. அவற்றை யெல்லாம் ஆராய்ந்து பார்க்குமிடத்து, மேலைச் சளுக்கிய மன்னனாகிய சத்தியாசிரயனுக்கும் இராசராச சோழனுக்கும் பெரும்போர் 'நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பதும், அதில் இராசராசனே வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு வெளியாகின்றன. மேலைச் சளுக்கியர்க்கும் சோழர்க்கும் பகைமை ஏற்பட்டமைக்குக் காரணம் புலப்படவில்லை. ஒரு காலத்தில் மேலைச் சளுக் கியர் ஆட்சிக்குட்பட்டிருந்த நுளம்ப பாடியை இராசராசன் வென்று தன் ஆட்சிக் குள்ளாக்கினமையே அன்னோர் பகைமைக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம். அன்றியும் வேறு காரணங்களும் இருத்தல் கூடும். அவை, இப்போது புலப்படவில்லை. மேலைச் சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் தைலபன் இறந்தபின்னர், அவன் மகன் சத்தியாசிரயன் என்பவன் இரட்டபாடி ஏழரை இலக்கத்திற்கு அரசனானான். தார் வார் ஜில்லா ஹொட்டூரில் கி. பி. 1007-ஆம் ஆண்டில் வரையப்பெற்றுள்ள அவன் கல்வெட்டொன்று, ' சோழர் குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராசராச நித்த விநோதன் மகனும் ஆகிய நூர்மடிச் சோழ இராசேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது இலட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீசப்பூர் ஜில்லாவிலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும் போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும் இளங்குழவிகள், மறையோர் என்றும் பாராமல் அவர் 1. S. 1. I., Vol, II, page 7. 2. Ep. Ind., Vol. XXII, No. 34, Verse 31. 3. S. I. I., Vol. III, No. 205, Verse 81.