பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பிற்காலச் சோழர் சரித்திரம் தன் மைத்துனனாகிய அம்மராசனைக் கொன்று நாட்டைக் கவர்ந்துகொண்ட தானார்ணன் செயலைக்கண்டு சீற்றங் கொண்ட தெலுங்கச்சோழனாகிய ஜடாசோட வீமன் என்பான் கி. பி. 973-ல் வேங்கி நாட்டின்மேற் படையெடுத்துத் தானார்ணவனைக் கொன்று அந்நாட்டைக் கைப்பற்றி ஆட்சி புரியத் தொடங்கினான். அப்பொழுது தானார்ணவன் மக்க ளாகிய சக்திவர்மனும் விமலாதித்தனும் வடகலிங்க நாட்டிற்கு ஓடி அங்குத் தங்கியிருந்தனர். அந்நாட்டு வேந்தனாகிய காமார்ணவனும் அவன் தம்பி வி நயாதித்தனும் அவர்களை ஆதரித்தமைபற்றி அவர் களுடைய பகைஞனாகிய அத் தெலுங்க வீமனால் முறையே கி. பி. 978, 981-ஆம் ஆண்டுகளிற் போரிற் கொல்லப்பட்டு நாட்டை ' யிழக்கும்படி நேர்ந்தது. கலிங்க நாடும் அவன் ஆட்சிக்குள்ளாயிற்று. அந்நாட்களில் கீழைச்சளுக்கிய அரச குமாரர் இருவரும் சோழ மண்டலத்தை யடைந்து இராசராச சோழன்பால் அடைக்கலம் புகுந்து, தெலுங்கவீமன் கவர்ந்து கொண்ட தமது நாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்கு முயன்று கொண்டிருந்தனர் 1. மூத்தோன் வழியினரின் செப்பேடுகள் எல்லாம் அவ் விருபத்தேழு ஆண்டுகளும் வேங்கி நாட்டில் குழப்பமுங் கலக மும் மிகுந்திருந்த காலம் என்றுகூறுகின்றன 2. அக்காலத் தில் அவர்கள் தம் நாட்டை இழந்து ஓரிடத்தில் கரந்துறை யும் வாழ்க்கையை மேற்கொள்ள நேர்ந்தமையால் அவர்களு டைய செப்பேடுகள் அவ்வாறு கூறுவதில் வியப்பொன்று மில்லை . இராசராசசோழன் அவர்கட்கு வேங்கி நாட்டை வென்று அளிப்பதற்கு முன்னர், சீட்புலி நாடு பாகி நாடு என்பவற்றின் மேல் படையெடுத்து அவற்றைக் கைப்பற்றுவது இன்றியமையாததாயிற்று. அந்நாடுகள், நெல்லூர் ஜில்லா 1. Ep. Ind, Vol. VI, pp. 358 & 359. 2. Historical Sketches of Ancient Deccan, page 247.