பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பிற்காலச் சோழர் சரித்திரம் சென்று அவற்றை வெற்றியுடன் நடத்திப் புகழெய்தியவன் இராசேந்திர சோழனேயாவன். ஆதலால், அவன் இளவரசுப் பட்டம் கட்டப்பெற்ற நாளில் முப்பது வயதிற்குக் குறையாத வனாக இருந்திருத்தல் வேண்டும். தஞ்சைப் பெரிய கோயிலி லும் . மற்றும் பல ஊர்களிலும் இராசராசன் .ஆட்சியின் 29-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றமை யாலும் அவ்வாண்டிற்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் கிடைக்காமையாலும் இவன் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனன் என்பது நன்கு தெளியப்படும். எனவே, கி. பி. 1014-ஆம் ஆண்டில் இவன் இறைவன் திருவடியை அடைந்தான் என்பது தேற்றம். இவனது ஆட்சியின் 29-ஆம் ஆண்டாகிய கி. பி. 1014-ல் கும்பகோணத் திற்கு வடகிழக்கே மூன்றரை மைலில் காவிரியாற்றின் வட கரையிலுள்ள திருவியலூர்க் கோயிலில் இவன் துலாபாரம் புகுந்ததையும் இவனுடைய முதற் பெருந்தேவியாகிய உலோகமாதேவி இரணிய கருப்பம் புகுந்ததையும் நுணுகி நோக்குங்கால் அவை இரண்டும் இவனது வாழ்நாளின் இறுதியில் நடைபெற்ற அறச்செயல்கள் என்பது ஒரு தலை யாக உணரப்படுகின்றது. அவ்வாண்டு முதல் இராசேந்திர சோழன் கல்வெட்டுக்களும் நம் தமிழகத்தில் யாண்டும் காணப்படுகின்றன. ஆகவே அவ்வாண்டில் இராசராசன் இறக்கவே, இராசேந்திரன் முடிசூட்டப்பெற்று அரசாளத் தொடங்கினன் என்பது தெள்ளிது. இராசராசசோழன் பல துறைகளிலும் சிறப்புற்று விளங்கியவனாதலின் அதுபற்றிப் பல சிறப்புப் பெயர்கள் இவனுக்கு அந்நாளில் வழங்கின என்பது கல்வெட்டுக் களால் உய்த்துணரக் கிடக்கின்றது. அவற்றுள், இராச ராசன் என்ற பெயர் முன் விளக்கப்பட்டது. மற்றச் சிறப்புப் பெயர்கள் க்ஷத்திரியசிகாமணி, இராசேந்திரசிங்கன், உய்யக்கொண்டான், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன் 1. சோழ வமிச சரித்திரச் சுருக்கம், பக். 16. 2. SI. 1., Vol. VIII, No. 237.