பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 123 நித்தவினோதன், இராசாசிரயன், சிவபாதசேகரன் சந்நாதன், சிங்களாந்தகன், சயங்கொண்டசோழன், மும்முடிச் சோழன் 2 இரவிகுல மாணிக்கம், நிகரிலிசோழன், சோழேந்திர சிங்கன், சோழமார்த்தாண்டன், இராச மார்த்தாண்டன், தெலுங்ககுல காலன், கீர்த்திப் பராக்கிரமன் என்பன. அவற்றுள் க்ஷத் திரிய சிகாமணி முதலாகவுள்ள ஏழு சிறப்புப் பெயர்கள், இராசராசன் கால முதல் சோழமண்டலத்தில் வள நாடுகளின் பெயர்களாகவும் வழங்கி வந்தமை அறியத்தக்கது. அன்றி யும் சயங்கொண்ட சோழன், மும்முடிச் சோழன், நிகரிலி சோழன் என்னுஞ் சிறப்புப் பெயர்கள் சயங்கொண்ட சோழ மண்டலம், மும்முடிச் சோழமண்டலம், நிகரிலி சோழமண்ட லம் என முறையே தொண்டை மண்டலம், ஈழ மண்டலம், நுளம்பபாடி என்பவற்றின் பெயர்களாகவும் வழங்கப் பெற் றுள்ளன. பல ஊர்களும், பேரூர்களிலுள்ள சேரிகளும் இராசராச சோழனுடைய சிறப்புப் பெயர்களையுடையனவாய் அந்நாட்களில் நிலவின என்பது கல்வெட்டுக்களால் புலப் படுகிறது. அவற்றுள் சில, அப்பெயர்களுடன் இக்காலத்தும் இருக்கின்றன. அவ்வேந்தற்கு வழங்கிய சிறப்புப் பெயர்களுள் இராச ராசன் என்பது யாண்டும் பரவி இயற்பெயர்போல் வழங்கி வந்தமையின் இவனது இயற்பெயராகிய அருண்மொழி தேவன் என்பது வழக்கற்றுப்போயிற்று. இவன் தன் பெயராகிய இராசராசன் என்பது என்றும் நின்று நிலவ வேண்டும் என்ற எண்ணமுடையவனாய்த் தலை நகராகிய தஞ்சாவூரில் மாபெருங் கோயில் ஒன்றை எடுப்பித்து 1. S. I. I., Vol. VIII., No. 222. இராசராச சோழனது ஆட்சியின் மூன்று நான்காம் ஆண்டுக் கல்வெட்டுக்களிலேயே இச்சிறப்புப் பெயர் காணப்படுகிறது. சோழ மண்டலத்தில் அந்நாளில் இருந்த வள நாடுகள், அருண்மொழிதேவ வள நாடு, க்ஷத்திரிய சிகாமணி வள நாடு, உய்யக்கொண்டான் வள நாடு, நித்த வினோத வள நாடு, பாண்டிய குலாசனி வள நாடு, கேரளாந்தக வள நாடு, இராசாசிரய வளநாடு, இராசராச வள நாடு, இராசேந்திரசிங்க வள நாடு என்பன.