பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பிற்காலச் சோழர் சரித்திரம் அதற்கு இராசராசேச்சுரம் என்று பெயரிட்டு நாள் வழி பாட்டிற்கும் விழாக்களுக்கும் நிவந்தங்கள் வழங்கிச் சிறப்பித் துள்ளான். அம்மாடக்கோயில் பிற்காலச் சோழர் காலத்துச் சிற்பத்திறத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இராசராசனது பெருமைக்கும் புகழுக்கும் சிவபத்திக்கும் ஒரு கலங்கரை விளக்காகவும் கண்டோர் யாவரும் வியக்குமாறு வானளாவ நின்று நிலவுவது யாவரும் அறிந்ததொன்றாம். ' பாண்டிய குலாசனி வள நாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி இராஜராஜேச்வரம்' என்னுங் கல்வெட்டுப் பகுதியினால் 2 இராசராசன் கோயில் எடுப்பித்த இடமும் அக்கோயிலின் பெயரும் அஃது அமைந்துள்ள நாடும் வள நாடும் நன்கு புலனாகும். இனி, இவன் எடுப்பித்த இராசராசேச்சுரம் என்னும் அக்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடை யது' . அதன்கண் அமைந்துள்ள நடுவிமானம் 216 அடி உயரம் உடையது . அதன் உச்சியில் போடப்பெற்றிருப் பது ஒரே கருங்கல். அஃது ஏறக்குறைய எண்பது டன் எடையுள்ளது என்றும் விமானத்தின்மேல் அமைக்கப் பெற்றுள்ள செப்புக்குடம் 3083 பலம் நிறையுடையது என்றும் அக்குடத்தின் மேல் போடப்பட்டுள்ள பொற்றகடு 2926) கழஞ்சு கொண்டது என்றும் அவற்றை ஆராய்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர். 1. S. 1. I., Vol. II, No. 1. 2. Ibid, Vol. II, page 2. 3. The Great Temple at Tanjure, p. 6, 4. Ibid, p. 8. 5. lbid, p. 9. 6. S. I. 1., Vol. II, p.3.. 7. Ibid.