பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பிற்காலச் சோழர் சரித்திரம் ஒரு பதிகம் பாடிப் பரவியுள்ளனர். அது, சைவத் திரு முறைகளுள் ஒன்றாகிய ஒன்பதாந் திருமுறையில் சேர்த் துத் தொகுக்கப்பட்டுள்ளது. இராசராச சோழனும் இவன் உரிமைச் சுற்றத்தினரும் வழித்தோன்றல்களும் அக் கோயிலுக்கு மிக்க வருவாயுள்ள ஊர்களும் பெரும் பொருளும் அணிகலன்களும் அளித்துப் போற்றிவந்தனர் என்பது அங்குக் காணப்படும் பல கல்வெட்டுக்களால் புலனாகின்றது. அன்றியும், இவன் காலத்தில் விளங்கிய அரசியல் அதிகாரிகளும், படைஞரும் அக் கோயிலுக்குப் பொற்பூக்களும் அணிகலன்களும் வழிபாட்டிற்கு நிவந்தங் களும் அளித்துள்ளனர். இனி, இராசராச சோழன் தஞ்சைமா நகரில் புதிய கோயில் ஒன்று அமைத்தனனா அன்றிப் பழைய கோயி லைப் பெரிய கற்றளியாக எடுப்பித்தனனா என்பது ஈண்டு ஆராய்தற்குரியதொன்றாம். அப்பர் அடிகளது திருவீழி மிழலைத் திருத்தாண்டகத்தில் காணப்படும் ' தஞ்சைத் தளிக்குளத்தார்? ' என்னுந் தொடரால் சைவ சமய குரவர்கள் காலங்களில் தஞ்சைமா நகரில் தளிக்குளம் என்னுங் கோயில் ஒன்று இருந்தது என்பது நன்கு வெளியாகின் றது. ஆகவே, அப்பெரியோர்கள் அத்திருப்பதிமீது பதி கங்கள் பாடியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. 1. இராசராசசோழன் அளித்தவற்றை அடியிற் காண்க. (i) பொற்கலங்கள் 41559 கழஞ்சு எடையுள்ளவை. (ii) அணிகலன்கள் 10200 காசு விலை மதிப்புள்ளவை. (iii) வெள்ளிக் கலங்கள் 50650 கழஞ்சு எடையுள்ளவை. (iv) 1,16,000 கலம் நெல்லும் 1100 காசும் வருவாயுள்ள கிராமங்கள். (Malaviya Commemoration Volume, p. 324.) 2. அப்பர் சுவாமிகள் திருவீழிமிழலைத் திருத்தாண்டகம் பா. 8.