பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 127 தேவாரப்பதிகங்களுள் பல அழிந்துபோயின என்பது பலரும் அறிந்ததேயாம். எனவே, தஞ்சைத் தளிக்குளத் திற்குரிய பதிகங்களும் அழிந்துபோயிருத்தல் வேண்டும். எனினும், அப்பர் அடிகள் தம் திருவீழிமிழலைப் பதிகத் தில் அத்திருப்பதியைக் குறிப்பிட்டிருத்தலால் அது வைப்புத் தலமாக இக்காலத்தில் கருதப்பட்டு வருதல் அறியற்பாலது. அத்தகைய தஞ்சைத் தளிக்குளத்தைத் தான் இராசராசசோழன் பெரிய கற்றளியாக எடுப்பித்து அதற்கு இராசராசேச்சுரம் என்னும் பெயரும் வழங்கிச் சிறப்பித்தனன் என்பது ஈண்டு உணரற்பாலதாகும். எனவே, அத்திருக்கோயிலின் தொன்மையும் பெருமையும் அறிந்துதான் இராசராசன் அதற்கு மிகச் சிறந்த முறை யில் திருப்பணி புரிந்து யாவரும் வியக்கும் நிலையில் அதனை அமைத்துள்ளனன் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, தஞ்சைமா நகரில் வெற்றிடமாகக் கிடந்த நிலப் பரப்பில் அஃது இராசராசனால் புதியதாக அமைக்கப்பெற்ற தொன்றன்று என்பது தெள்ளிது. இராசராச சோழன் சிவபாதசேகரன் என்னுஞ் சிறப்புப் பெயர் உடையவன் என்பது முன் கூறப்பட்டுள்ளது. இவன் சிவபெருமானிடத்தில் அளவற்ற பக்தியுடையவன் என்பது இவன் தஞ்சையில் எடுப்பித்த பெருங் கோயி லாலும் அதற்கு வழங்கியுள்ள நிவந்தங்களாலும் நன்கு விளங்கும். இவன் அத்துணைச் சிவபத்தியுடையவனாய்த் திகழ்ந்தமைக்குக் காரணம், சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டு பல தொண்டுகள் ஆற்றிய செம்பியன் மாதேவியும் குந்தவைப் பிராட்டியும் இவனை இளமையில் வளர்த்து நல்வழிப்படுத்தியமையேயாம். தாம் மேற்கொண்ட சமய மொழிய மற்றைச் சமயங்களைக் கடைப்பிடித்தொழுகும் தம் நாட்டு மக்களை வெறுத்துப் பல்லாற்றானுந் துன்புறுத் தும் அரசர் சிலர் போல, இவன் புறச்சமயத்தாரிடம் சிறிதும் வெறுப்புக்காட்டியவன் அல்லன். இவன் எல்லாச் சமயங் களையும் சோபான முறையில் வைத்துக் காணுங் கருத் துடையவனாய் அவற்றிற்குச் சிறிதும் இடையூறு நேராமல்