I முதல் இராசராச சோழன் 129 எல்லாச் சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை அன்புடன் ஆதரித்து வந்தனன் என்பது இனிது பெறப்படுகின்றது. எனவே, பேரரசராயிருப் பார்க்கு இன்றியமையாத சிறந்த பண்புகளுள் ஒன்றாகிய சமயப்பொறை நம் இராசராச சோழன்பால் நன்கு நிலை பெற்றிருந்தது என்பது தெளிவாகப் புலப்படுதல் காண்க. இவ்வேந்தன் ஆட்சியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளுள் சோழ இராச்சியம் முழுவதையும் அளந் தமை ஒன்றாகும். ஓர் அரசன் தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் எல்லாவற்றையும் அளந்து நிலங்களின் பரப்பை உள்ளவாறு உணர்ந்தாலன்றி நிலவரியை ஒழுங்குபடுத்திக் குடிகளிடமிருந்து வாங்குவது இயலாததாகும். ஆதலால் இவன் தன் ஆட்சியின் 16-ஆம் ஆண்டாகிய கி. பி. 1001-ல் சோழ இராச்சியம் . முழுவதையும் அளக்குமாறு ஆணையிட்டனன் . அவ்வேலையும், குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் தலைமையில் தொடங்கப்பெற்று இரண்டு ஆண்டுகளில் நிறைவேறியது, அவ்வதிகாரி இராச்சியம் முழுமையும் அளந்த காரணம்பற்றி ' உலகளந்தான்' என் னுஞ் சிறப்புப் பெயர் பெற்றனன். அன்றியும், • இராசராச மாராயன் ' என்னும் பட்டமும் அவனுக்கு இராசராச சோழ னால் வழங்கப்பெற்றிருப்பது அறியத்தக்கது. நிலம் அளந்த கோல் பதினாறு சாண் நீளமுடையது. அதனை உலகளந்த கோல் என்றும் அந்நாளில் வழங்கினர். இம் மன்னன் புரிந்த மற்றோர் அரிய செயல், சோழ இராச்சியத்திலுள்ள ஒவ்வொரு மண்டலத்தையும் பல வள நாடுகளாகப் பிரித்து யாண்டும் தன் ஆட்சி இனிது நடை பெறுமாறு செய்தமையேயாம். அஃது இராச்சியம் முழுமை யும் அளந்த பின்னர், இவன் தன் ஆட்சியின் பதினேழாம் ஆண்டாகிய கி. பி. 1002-ல் புரிந்த சீர்திருத்தச் செயலாகும்2 . அதற்குமுன் ஒவ்வொரு மண்டலமும் பல நாடுகளாகப் 1. S. I. I. Vol., VIII, Nos. 222 and 223. 2. S. I. I., Vol. V, No. 1409.
பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/156
Appearance