பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சராச முதல் இராசராச சோழன் 137 பரப்பை இராசராசன் காலத்தில் குறுநில மன்னனாயிருந்து கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனன் என்று உணர்த்து கின்றது. . இவன் தந்தை இலாட ராசன் புகழ்விப்பவர் கண்டன் என்பதும் இவன் முன்னோர் தொண்டைமண்ட லத்தில் படுவூர்க்கோட்டத்திலுள்ள பெருந்திமிரி நாட்டை யாண்டவர் என்பதும் அக்கல்வெட்டால் வெளிப்படுகின்றன. இராசராசன் மனைவியருள் இலாடமாதேவி என்பாள் இவ் விலாடப் பேரரையன் மகள் ஆதல் வேண்டும் ; அன்றேல் இவன் தந்தை இலாடராசன் மகளாதல் வேண்டும். இப் போது அதனை ஒருதலையாகக் கூற இயலவில்லை. வாணகப்பாடி நாட்டில் அரசாண்ட மறவன் நரசிம்ம வர்மனாகிய இராசராச வாணகோவரையன் என்பவன் இராச ராசனுக்கு உட்பட்ட ஒரு குறு நில மன்னன் என்பது தென் னார்க்காடு ஜில்லாவிலுள்ள ஜம்பை என்னும் ஊரில் காணப் படும் இரண்டு கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது? . இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த வாணகப்பாடி நாடு தென்னார்க்காடு ஜில்லாவின் ஒரு பகுதியாகும். இனி, இராசராசன் ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும் படைத் தலைவராகவும் நாட்டதிகாரிகளாகவும் திருமந்திர ஓலை நாயகமாகவும் அறநிலயக் கண்காணிப்பாளராகவும் அமர்ந்து அரசாங்கத்தை நன்கு நடத்திவந்த அரசியல் அதிகாரிகள் பலர் ஆவர். அவர்களுள் கல்வெட்டுக்களால் அறியப்படும் சிலரைப்பற்றிய செய்திகளை மாத்திரம் ஈண்டுச் சுருக்கமாகக் குறிப்பிடுதல் ஏற்புடையதேயாம். 1. சேனாபதி கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழ பிரமமாராயன்:- இவன் வெண்ணாட்டு அமண் குடியினன் ; அந்தணர் குலத்தினன் ; இராசராசனுடைய படைத்தலைவர் 1. Ep. Ind., Vol. IV, No. 14 B• 2. Ins. Nos. 84 and 86 of 1906. இதில் குறிப்பிடப்பெற்ற ஜம்பை என்னும் ஊர், சோழமன்னர் ஆட்சிக்காலங்களில் சண்பை என்ற பெயருடையதாயிருந்தது என்று கல்வெட்டுக்களால் தெரிகிறது.