பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பிற்காலச் சோழர் சரித்திரம் என்பது ஈண்டு உணரத்தக்கது. இவனை இரண்டாங் கண்டராதித்தன் என்றும் கூறலாம். 5. ஈராயிரவன் பல்லவரையன் ஆகிய மும்முடி சோழ போசன் :- இவன் பாம்புணிக் கூற்றத்து அரசூரின்கண் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு தலைவன் ; இராசராசசோழன் பெருந்தரத்து அதிகாரிகளுள் ஒருவன் ; தஞ்சைப் பெரிய கோயிலில் சண்டேசுவர தேவரை எழுந்தருளுவித்து வழி பாட்டிற்கு நிவந்தங்கள் அளித்தவன்' ; வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள திருவல்லம், மேற்பாடி என்னும் ஊர் களிலுள்ள கோயில்களுக்கும் நிவந்தங்கள் வழங்கியுள்ள னன் என்பது அக்கோயில்களில் காணப்படுங் கல்வெட் டுக்களால் புலப்படுகிறது.. இவன் இராசராச சோழனுக் குத் திருமந்திர ஓலை நாயகமாகவும் சில ஆண்டுகள் வரையில் இருந்துள்ளனன். ஆனைமங்கலச் செப்பேடுகளில் கை யெழுத்திட்டுள்ள அரசியல் அதிகாரிகளுள் இவனும் ஒருவனாதலின், இவன் இராசராசசோழன் இராசேந்திர சோழன் ஆகிய இருவர் ஆட்சியிலும் உயர் நிலையில் இருந் தவன் ஆதல் வேண்டும். இவன் பல்லவர் குடித்தோன்றல் ; மும்முடி சோழ போசன் என்னும் அரசாங்கப் பட்டம் பெற்ற பெருமையுடையவன். 6. பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்த வேளான் :- இவன் சோழ மண்ட லத்தில் இராசேந்திர சிங்க வள நாட்டின் உள் நாடுகளுள் ஒன்றாகிய பொய்கை நாட்டின் தலைவன் ; இராசராச சோழன் தஞ்சைமா நகரில் எடுப்பித்த பெரிய கோயிலில் இவ்வேந்தன் ஆணையின்படி ஸ்ரீ காரியஞ் செய்துவந்த வன் ; சிவபெருமானிடத்தில் சிறந்த பக்தியுடையவன். இவன், இராசராசேச்சுரத்தில் திருஞானசம்பந்த அடிகள், 1. S. I. I., Vol. II, No. 55, 2. Ibid, Vol. III, Nos. 19 and 54. 3. Ep, Ind., Vol. XXII, No, 34.