பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvi

யளித்த காலஞ்சென்ற சர் K. V. ரெட்டி நாயுடு, K. C. I. E. அவர்கட்கும், பின்னர் துணைவேந்தராயிருந்த திரு. M. இரத்தினசாமி, M. A., C. I. E. அவர்கட்கும், இஞ்ஞான்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவுள்ள திருவாளர் டாக்டர் S. G. மணவாள ராமானுஜம், M.A, Pih.D அவர்கட்கும், தமிழாராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவர் மகா மகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்கட்கும், காலஞ்சென்ற பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, M. A., M. L., அவர்கட்கும், அன்பு கூர்ந்து முன் னுரை யுதவிய தமிழ்ப் பேராசிரியர் பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், M.A., B.L., M.O.L. அவர்கட்கும், இப்போது தமிழ்ப் பேராசிரியராகவுள்ள டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார், M. A. அவர்கட்கும் என்றும் நன்றி பாராட்டும் கடப்பாடுடையேன்.

இந்நூல் விரைவில் வெளிவருமாறு செய்த பல்கலைக் கழக ரிஜிஸ்தரார் திருவாளர் S. சச்சிதானந்தம் பிள்ளை, B. A., L. T. அவர்களையும் அவ்வப்போது உசாத்துணையாயிருந்துதவிய தமிழாராய்ச்சிக்கழக விரிவுரையாளர்களாகிய திருவாளர்கள் வித்துவான் கோ. சுப்பிரமணிய பிள்ளை, M. A. B. L., E S. வரதராச ஐயர், B. A., வித்துவான் ஔவை சு. துரைசாமி பிள்ளை ஆகியவர்களையும் அவர்களுள் குறிப்பாக 'புரூப்' முதலியன திருத்தி அன்புடன் உதவிபுரிந்துவந்த திரு. வித்துவான் க. வெள்ளைவாரணனார், இந்நூலிற் சில பகுதிகளைப் படியெடுத்தும் பொருட்குறிப்பகராதியினைத் தொகுத்தும் உதவிய சிதம்பரம் பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் திரு. T. S. நடராசக் குருக்கள், B. A., L. T. வரலாற்றுப் படங்களை வரைந்துதவிய திரு. T. M. சம்பந்த நாயகர் ஆகியோரையும் எக்காலத்தும் மறவேன். நிழற்படங்களை வெளியிடவுதவிய இந்தியப் பழம் பொருளாராய்ச்சித் துறைத் தலைவர்க்கு எனது நன்றியுரியதாகும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலை நகர்,
14-8-′49
இங்ஙனம்,

T. V. சதாசிவ பண்டாரத்தார்