பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 143 10. விளத்தூர் கிழவன் அமுதன் தீர்த்த கரன் :-- இவன் நித்தவிநோத வள நாட்டு ஆவூர்க் கூற்றத்து விளத் தூரினன் ; இராசராச சோழனிடத்தில் திருமந்திர ஓலை எழுதும் அலுவலில் அமர்ந்திருந்தவன். நாகப்பட்டினத்துப் புத்தவிகாரத்திற்கு இவ்வேந்தன் ஆனைமங்கலம் என்னும் ஊரைப் பள்ளிச்சந்தமாக அளித்த உத்தரவை எழுதியவன் இவனேயாவன். பல மண்டலங்களைத் தன்பாற்கொண்டு நிலவிய சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து அர சாண்ட இராசராச சோழன் காலத்தில் அரசியலில் பல துறைகளிலும் அதிகாரிகளாக அமர்ந்து அரசாங்க அலு வல்களைப் பார்த்துவந்தோர் பலர் ஆவர். அவர்களுள் மிகச் சிலரைப்பற்றிய செய்திகளே கல்வெட்டுக்களின் துணை கொண்டு ஈண்டு எழுதப்பட்டன. இனி, இராசராச சோழன் வரலாற்றைக் கூறும் நூல் ஒன்று அந்நாளில் இருந்தது என்பது திருப்பூந் துருத்தியி லுள்ள ஒரு கல்வெட்டால் அறியப்படுகிறது. அந்நூலின் பெயர் • ஸ்ரீ இராசராச விஜயம்' என்பது. அதன் ஆசிரியர் சவர்ணன் நாரணன் பட்டாதித்தன் என்பார். அது வடமொழியில் எழுதப்பெற்ற நூல் என்பது உய்த் துணரக்கிடக்கின்றது. அன்றியும் ' இராசராசேசுவர நாடகம்' என்ற நாடகநூல் ஒன்றும் இருந்தது என்பது தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டால் புலனாகிறது. 2 அது விழாக்காலங்களில் தஞ்சைப் பெரிய கோயிலில் நடிக்கப்பட்டிருத்தலால் அந்நாடகம் தமிழ் மொழியில் எழுதப்பெற்றதாதல் வேண்டும். அந்நாடகம் இராசராச சோழன் தஞ்சையில் • இராசராசேச்சுரம்' என்னுங் கோயில் எடுப்பித்த வரலாற்றைத் தன்பாற் கொண்டது போலும். 1. Annual Report on South Indian Epigraphy for 1930-31, para 12. 2, S. I. I., Vol. II, No. 67.