பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142) பிற்காலச் சோழர் சரித்திரம் சோழன் இவனது சிறந்த பண்புகளை யுணர்ந்துதான் இராசராசேச்சுரத்தில் ஸ்ரீகாரியஞ் செய்யும் வேலையில் இவனை அமர்த்தினன்போலும். 7. பாளூர் கிழவன் அரவணையான் மாலரிகேசவன் :-- இவன் இராசராசன் காலத்திலிருந்த அரசியல் அதிகாரி களுள் ஒருவன் ; பாண்டி நாட்டுத் திருக்கானப்பேர்க் கூற்றத்துப் பாளூரின் தலைவன் ; இராசராசேச்சுரத்தில் ஸ்ரீகாரியக் கண்காணி நாயகமாக இருந்தவன்.! 8. இராசகேசரி நல்லூர் கிழவன் காறாயில் எடுத்த பாதம் :- இவன் இராசராச சோழன்பால் திருமந்திர ஓலை எழுதும் ஓர் அதிகாரியாயிருந்தவன். ' ஸ்ரீ இராஜராஜ தேவர்க்குத் திருமந்திர ஓலை யெழுதும் அருமொழி தேவ வள நாட்டு இங்கண் நாட்டு இராஜகேசரி நல்லூர் கிழவன் காறாயில் எடுத்த பாதம்' என்ற கல்வெட்டுப் பகுதியினால் 2 இவன் நாடும் ஊரும் பேரும் மேற்கொண் டிருந்த அலுவலும் அறியற்பாலவாம். 9. வேளான் உத்தமசோழனாகிய மதுராந்தக மூவேந்த வேளான் :- இவன் அருமொழிதேவ வள நாட்டு நென்மலி நாட்டுப் பருத்திக்குடியிலிருந்த ஒரு தலைவன் ; இராசராச சோழனிடத்தில் திருமந்திர ஓலை நாயகமாக இருந்தவன். இவன் பெயர் ஆனைமங்கலச் செப்பேடுகளில் காணப்படு கிறது.3 இவன் மதுராந்தக மூவேந்த வேளான் என்ற அரசாங்கப் பட்டம் பெற்றவன். 1. ' உடையார் சீராஜராஜேசுவரம் உடையார்க்குச் சீகாரியக் கண்காணி நாயகஞ் செய்கின்ற பாண்டி நாடான இராஜராஜ மண்டலத்துத் திருக்கானப் பேர்க்கூற்றத்துப் பாளூர் பாளூர் கிழவன் அரவணையான் மாலரிகேசவன்' (S. I. I., Vol. 11, No. 36) 2. S. I. I., Vol. II, No. 27. 3. Ep. Ind., Vol. XXII, No. 34.