பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினொன்றாம் அதிகாரம் முதல் இராசேந்திர சோழன் கி. பி. 1012-1044 ‘பூர்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறும் இவ்வரசர் பெருமான், முதல் இராசராச சோழ னுக்கு அவன் கோப்பெருந்தேவியருள் வானவன்மாதேவி என்று வழங்கும் திரிபுவனமாதேவிபால் பிறந்த புதல்வன் ஆவன். இவன் மார்கழித்திங்கள் திருவாதிரை நாளில் பிறந்தவன் என்பது திருவொற்றியூரிலுள்ள ஒரு கல்வெட் டால் புலப்படுகிறது' . விருத்தாசலத்திலுள்ள கல்வெட் டொன்று இவ்வேந்தன் நலங்கருதித் திருமுதுகுன்றமுடை யார் கோயிலில் திங்கள் தோறும் திருவாதிரை நாளில் விழா நடத்துவதற்கு நிலம் அளிக்கப்பெற்ற செய்தியைக் கூறு கின்றது. இதனாலும் இவன் திருவாதிரை நாளிற் பிறந்தவன் என்பது உறுதியாதல் காண்க. இவன் தந்தை இவனுக்கு மதுராந்தகன் என்று பெயரிட்டிருந்தனன் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடு களால் அறியக்கிடக்கின்றது . இவனுக்கு இப்பெயர் இடப்பெற்றிருந்த செய்தி கன்னியாகுமரிக் கல்வெட்டி னாலும் வலியுறுகின்றது. இராசராச சோழன் தன் சிறிய 1, S.I. I., Vol. V, No. 982 ; Ind 460 of 1908. 2. 'திருவொற்றியூருடைய மகாதேவர்க்கு உடையார் ஸ்ரீ இரா சேந்திர சோழதேவர் திருநாள் மார்கழித் திருவாதிரை ஞான்று நெய்யாடியருளவேண்டு (ம) மிசத்துக்குத் திரு வொற்றியூர் திருமயானமும் மடமுடைய சதுரானன பண்டிதன் தேவர் பண்டாரத்து வைத்த காசு நூற்றைம்பது' (S. I. I., Vol. V, No. 1354.) 3. Ins. 54 of 1918, 4. S. I. I., Vol. III, No. 205,Verse 85. 5. Travancore Archaeological Series, Vol. III, No. 34,Verse68. 10