பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பிற்காலச் சோழர் சரித்திரம் படுவது ஐந்தாம் ஆட்சியாண்டு முதல் தான் என்பது அறியத்தக்கது. அவ்வப்போது நிகழும் அரசனுடைய வீரச்செயல்களையும் புகழுக்குரிய பிற செயல்களையும் மெய்க் கீர்த்தியில் ஆண்டுதோறும் சேர்த்துக்கொண்டே போவது அக்கால வழக்கமாதலின், அரசனது ஆட்சிக்காலம் மிகுந்து செல்லச் செல்ல, மெய்க்கீர்த்தியும் தன் அளவிற் பெருகிக்கொண்டே போகும். அதனால் ஓர் அரசன் ஆட்சியில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் எவ்வெவ்வாண்டில் நடை பெற்றது என்பதை உறுதியாக உணர்ந்துகொள்ளலாம்'1. நம் இராசேந்திரன் மெய்க்கீர்த்தியும் இவன் ஆட்சியில் ஆண்டுதோறும் நிகழ்ந்த வீரச் செயல்களையும் பிறவற் றையும் முறையாகப் புலப்படுத்தும் வகையில் பெருகிக் கொண்டேபோய், இவனது பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் ஒரு நிலையில் அமைந்துள்ளது. பிறகு, இவன் ஆட்சிக் காலம் முழுவதும் அந்நிலையிலேயே இருந்தது எனலாம். இவனது ஆட்சியின் ஆறாம் ஆண்டில் வட திருவாலங் காட்டுக் கோயிலுக்கு விடப்பெற்ற நிவந்தத்தை உணர்த்தும் இவனது திருவாலங்காட்டுச் செப்பேடுகள் 2 இவன் முன்னோர் வரலாற்றை நன்கு விளக்குகின்றன; எனினும் இவன் ஆட்சிக்காலத்து நிகழ்ச்சிகளை இவன் மெய்க்கீர்த் தியைப்போல் அத்துணை முறைப்பட அச்செப்பேடுகள் கூறவில்லை. இவனது புறநாட்டுப் படையெழுச்சிகள் எல்லாம் ஒருவாறு முடிவெய்திய பின்னரே திருவாலங் காட்டுச் செப்பேடுகள் வரையப்பட்டிருக்கின்றன. ஆதலால் 1. இத்தகைய மெய்க்கீர்த்திகள் நம் தமிழ்நாட்டில் தான் காணப்படுகின்றன. வரலாற்று ஆராய்ச்சிக்குப் பயன்படும் மெய்க்கீர்த்தியை முதலில் கல்வெட்டுக்களில் வரையத் தொடங்கியவன் நம் இராசேந்திர சோழன் தந்தையாகிய முதல் இராசராச சோழன் என்பது முன் விளக்கப் பட்டுள்ளது. 2. Thiruvalangadu Plates of Rajendra Chola, S. I. I., Vol. III, No. 205.