பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பிற்காலச் சோழர் சரித்திரம் கல்வெட்டுக்கள் சிலவற்றாலும் அச்செய்தி உறுதியா கின்றது 1. அக்கல்வெட்டுக்கள் சிதைந்த நிலையில் இருத்த லால் அவற்றிலுள்ள வரலாற்றுச் செய்திகள் எல்லாவற்றை யும் அறிய இயலவில்லை . இனி, ஐந்தாம் மகிந்தன் மகனாகிய காசிபன் என்பவனை ஈழ நாட்டு மக்கள் மறைவாக வளர்த்து வந்தனர் என்பதும் அவன் தந்தை சோழநாட்டில் இறந்தவுடன் அவர்கள் அவனைத் தம் அரசனாக ஏற்றுக்கொண்டு சோழ நாட்டுப் படைகளுடன் ஆறு திங்கள் வரையில் போர்புரிந்து தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டைக் கைப்பற்றி விக்கிரமபாகு என்ற பெயருடன் கி. பி. 1029-ஆம் ஆண்டில் அவனுக்கு முடிசூட்டினார்கள் என்பதும் அவன் கி. பி. 1041-வரையில் அந்நாட்டிலிருந்து அரசாண்டனன் என்பதும் மகாவம்சத் தால் அறியப்படுகின்றன. இராசேந்திர சோழனது ஆட்சியின் ஆறு 2 ஏழாம் 3 ஆண்டுகளில் வரையப்பெற்ற கல்வெட்டுக்கள் இவன் சேர நாட்டின்மேல் படையெடுத்துச்சென்று அந்நாட்டரசர்க்கு வழிவழி யுரிமையுடையனவாயிருந்த முடியையும் மாலையையும் கி. பி. 1018.ல் கைப்பற்றிக்கொண்டு பழந்தீவையும் பிடித்துக் கொண்டான் என்றும் யாவரும் கிட்டுதற்கரிய அரண்களை 1. S. I. I., Vol. IV, Nos. 1389, 1390 and 1414. 2. ' எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும் குல தனமாகிய பலர்புகழ் முடியும் செங்கதிர்மாலையும் சங்கதிர் வேலைத் தொல்பெருங் காவல் பல்பழந் தீவும் ' (S. I. I., Vol. V, No. 578) 3. ' செருவிற் சினவி இருபத் தொருகால் அரசுகளை கட்ட பரசு ராமன் மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும்' (Ins. 29 of 1923.)