பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பிற்காலச் சோழர் சரித்திரம் அந்நாடுகளை வென்று தன்னடிப்படுத்தினான் என்று திரு வாலங்காட்டுச் சேப்பேடுகள் கூறுவது அத்துணைப் பொருத்தமுடையதாகக் காணப்படவில்லை. எனினும், புதுச்சேரியைச்சார்ந்த திருவாண்டார் கோயிலில் வரையப் பெற்றுள்ள இவனது ஆட்சியின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, ' பாரது நிகழப் பாண்டி மண்டலத்து மதுரையில் மாளிகை எடுப்பித்துத் தன் மகன் சோழ பாண்டியன் என்றபிஷேகஞ் செய்து தண்டாற்சாலைக் கலமறுத்த கோப்பரகேசரி 1' என்று கூறுகின்றது. அதனை ஆராய்ந்து பார்க்குங்கால் இவ்வேந்தன் மதுரைமா நகரில் ஓர் அரண்மனை எடுப்பித்து, அங்குத் தன் மகனைச் சோழபாண்டியன் என்னும் பட்டத்துடன் முடிசூட்டிப் பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்து வருமாறு ஏற்பாடு செய்திருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது. அங்ஙனம் மதுரையம்பதியிலிருந்து தன் தந்தையின் ஆணையின்படி ஆட்சிபுரியத் தொடங்கியவன் சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியன் என்பது பாண்டி நாட்டில் காணப்படும் கல் வெட்டுக்களால் அறியப்படுகிறது. இச்செய்திகளையே திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பாக உணர்த்து கின்றன என்று கொள்வது ஒருவாறு பொருந்தும். இனி, பாண்டி நாட்டை ஆண்டுகொண்டிருந்த அச் சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியனுக்குச் சேர நாட்டின் ஆட்சி உரிமையையும் இராசேந்திரன் பிறகு அளித் துள்ளான் என்று தெரிகிறது. அவ்வுண்மை, சேர நாட்டில் காணப்படும் அவன் கல்வெட்டுக்களால் புலனாகின் றது. நாஞ்சில் நாட்டுச் சுசீந்திரம் சுந்தரசோழச் சதுர்வேதி மங்கலம் என இவன் பெயரால் வழங்கியுள்ளமையும் அறியத் தக்கது 2. சோழர்குலத் தோன்றலாகிய அவன் பாண்டி நாட்டை ஆண்டமையால் அவனுக்குச் சோழபாண்டியன் 1. Ins. 363 of 1917. 2. T. A. S., Vol. IV, Nos. 32 & 35; Ibid., Vol. V, No. 7A and B; Ibid, Vol. VI, Nos. 4 to 10.